மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த சுபிட்ச துர்கா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த மார்ச் 28ம் தேதி 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரிகள்), கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் போன்ற பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய குரூப் I தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், சில பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அவை கிடைமட்ட (horizontal reservation) ஒதுக்கீட்டில் இல்லாமல், செங்குத்து இடஒதுக்கீடாக செய்யப்பட்டுள்ளன.
குரூப்-1 தகுதி பட்டியலிலும் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படவில்லை. ஒதுக்கீடு தொடர்பான அனைத்து அரசு உத்தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவும் முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால் இட ஒதுக்கீட்டு நடைமுறையின் முழு பயனும் கிடைப்பதில்லை. இதில், பொது பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் அதற்குறிய மதிப்பெண் பெறமால், தமிழ்வழியில் பயின்று குறைவான மதிப்பெண் பெற்றவர்களை வைப்பது தவறு.
மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியை தமிழ் வழியில் பயின்ற பட்டியல் இனத்தவர்கான இட ஒதுக்கீடு வைக்க பட்டுள்ளது, இது தவறு. இது போல பணியிட இட ஒதுக்கீட்டில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. எனவே குருப் 1 அறிவிப்பில் பணியிடங்களில் செய்த இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து, இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி பணியிடங்களை வகைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், " வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: தமிழகம் வருகிறதா ஆந்திரா மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?