ETV Bharat / state

குடிபோதையால் வந்த வினை; அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர்! - AMBUR BUS ACCIDENT - AMBUR BUS ACCIDENT

ஆம்பூரிலிருந்து பேரணாம்பட்டு செல்லும் அரசுப் பேருந்தில் மது போதையில் பயணம் செய்த இளைஞர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர்
பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 5:56 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் அரசுப் பேருந்து (பேருந்து தடம் எண்:84) முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது. பைபாஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது மதுபோதையில் ஏறிய இளைஞர் ஒருவர் படிக்கட்டிலேயே நின்று பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த நடத்துநர், பேருந்தின் உள்ளே வரும்படி கூறியும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் படிக்கட்டிலேயே பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் பேருந்தானது பைபாஸ் சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் சென்ற சிறிது நேரத்திலேயே படிக்கட்டில் நின்று பயணம் செய்த இளைஞர், ஓடும் பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, மது போதையில் அரசு பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஆம்பூர் மாங்காதோப்பு மூன்றாவது தெருவை சேர்ந்த இஸ்மாயில் என்பது தெரிய வந்துள்ளது. இவர் பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். அப்போதுதான் இந்த விபத்து நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தலையில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இஸ்மாயில், மீண்டும் அதே பேருந்தில் ஏறி பயணம் செய்ய முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்பூர் பைபாஸ் சாலையில் சாலையோரம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் இதனால் அங்குள்ள வணிகர்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர் சாலையோரம் நிறுத்தி வைக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆட்கள் தேர்வு தனியாருக்கு விடப்படுவது ஏன்? - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.