ETV Bharat / state

சேவை குறைபாடு; ரூ.60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க ஓலா நிறுவனத்திற்கு உத்தரவு! - fine for ola electric scooter - FINE FOR OLA ELECTRIC SCOOTER

Fine for ola electric scooter: வாடிக்கையாளருக்கு உரிய நேரத்தில் சேவை வழங்காமல் மனஉளைச்சலை ஏற்படுத்திய ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓலா மின்சார ஸ்கூட்டர்
ஓலா மின்சார ஸ்கூட்டர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 10:50 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி முத்து நகர் கிழக்கு முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் குருராஜ் (50). செய்தியாளரான இவர் பெரம்பலூர் லயன்ஸ் சங்கத்தின் ஆலோசகராக உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஓலா நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 270க்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி இருசக்கர மின் வாகனத்தை (இ-ஸ்கூட்டர்) புக் செய்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஓலா இருசக்கர மின் வாகனம் அவரது வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.அப்போது, ஏறத்தாழ ஒரு வருட காலம் பயன்பாட்டில் இருந்த ஸ்கூட்டரில் இருக்கிற சாப்ட்வேரை கடந்த ஜனவரியில் 4.0 வெர்சனாக ஓலா நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. அவ்வாறு அப்டேட் செய்து கொண்டிருந்த நிலையில், ராஜன் குருராஜின் ஓலா ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டு அதனை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த ராஜன் குருராஜ், ஸ்கூட்டரில் ஏற்பட்ட பழுது குறித்த தகவலை ஓலா நிறுவனத்தின் திருச்சி எக்ஸ்பீரியன்ஸ் மையம் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள ஓலா தலைமை அலுவலத்திற்கு மின் அஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் புகாராக பதிவு செய்து பழுது நீக்கி தருமாறு கேட்டுள்ளார்.

புகார் பதிவு செய்து 15 நாட்கள் கடந்த நிலையில், ஓலா நிறுவனத்தின் தொழில் நுட்ப பணியாளர் ஒருவர் ராஜன் குருராஜின் வீட்டிற்கு நேரில் வந்து பழுதான மின் வாகனத்தை ஆய்வு செய்து, பேட்டரியில் பழுது ஏற்பட்டதை கண்டறிந்து, 2 வார காலத்திற்குள் சரி செய்து தருவதாக கூறிவிட்டு சென்று விட்டார்.

ஆனால், 2 வார காலத்திற்குள் பழுதான பேட்டரிக்கு பதிலாக புதிய பேட்டரியை மாற்றித்தர ஓலா நிறுவனத்தினர் முன் வரவில்லை. மேலும் வாகனம் பழுதாகி 45 தினங்களுக்கு மேலாகியும் ஓலா நிறுவனம் அந்த இருசக்கர வாகனத்தை சரி செய்து கொடுக்காததால் வாகனத்தை இயக்க முடியாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்த ராஜன் குருருராஜ் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனையடுத்து, இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் தனது வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி மூலம் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஓலா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் திருச்சி சாலை ரோட்டில் உள்ள ஓலா எக்ஸ்பீரியன்ஸ் மையத்தின் பொறுப்பாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே ஓலா நிறுவனத்தினர், மனுதாரரின் பழுதான மின்வாகனத்தின் பேட்டரியை 44 நாட்கள் கழித்து புதிதாக மாற்றித் தந்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய நீதிபதி ஜவஹர் மற்றும் உறுப்பினர்கள் திலகா மற்றும் முத்துகுமரன் ஆகியோர் வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய ஓலா நிறுவனம் ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகையும், வழக்கு செலவுத்தொகை ரூ. 10 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ. 60 ஆயிரத்தை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு, 45 நாட்களுக்குள் வழங்காவிட்டால் அதற்குரிய வட்டி 8 சதவீத தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மேலாளர் தற்கொலை..சோகத்தில் மூழ்கிய குடும்பம் - chennai online rummy suicide

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.