ETV Bharat / state

கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி!

கோயம்புத்தூரில் இரண்டு மணி நேரத்திற்கும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 11:50 AM IST

கோயம்புத்தூர்: வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூரில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. அதற்கு மேல் மதியத்தில் இருந்து கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம் ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சாய்பாபா காலனி, சிவானந்த காலனி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் குழந்தைகள் உள்பட 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிக் கொண்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் முதலில் பேருந்துக்குள் சிக்கி இருந்த பயணிகளை வெளியேற்றினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் பேருந்து வெளியேற்றப்பட்டது.

சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "பருவமழையை எதிர்கொள்ள அரசுடன் கழகமும் களத்தில் நிற்க வேண்டும்" - திமுக தலைமை உத்தரவு!

சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் சாலைகளில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகரில் மழைநீர் சூழ்ந்துள்ள பல்வேறு பகுதிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மழை நீரை அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதேபோன்று நேற்று இரவு முழுவதும் மழை பெய்தால் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பாதிப்புகள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.