ETV Bharat / state

பல்லுயிர்களை வாழ வைக்கும் கோயில் காடுகள்.. அழிவிலிருந்து காக்குமா அரசு? - sacred groves - SACRED GROVES

Sacred groves: சுற்றுச்சூழலுக்கும், பல்லுயிர்களின் வாழ்வியலுக்கும் ஆதாரமாகத் திகழும் புனிதக்காடுகள் என்றழைக்கப்படும் கோயில் காடுகளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. அது குறித்த சிறப்புத் தொகுப்பு.

கோயில் காடுகள்
கோயில் காடுகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 9:55 PM IST

மதுரை: பல்லுயிரிய மேம்பாட்டிற்கும், சுற்றுச்சூழலின் அவசியம் கருதியும் நம் முன்னோர்களால் ஆன்மீகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புனிதக் காடுகள் அல்லது காப்புக் காடுகளே கோயில் காடுகள் என்றழைக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 50 ஏக்கரிலிருந்து 500 ஏக்கர் வரை விரிந்து பரவிக் காணப்படும் இந்தக் கோயில் காடுகள், தமிழகத்தின் பல்வேறு கிராமப்புறங்களில் இன்றும் சிறந்த மேய்ச்சல் நிலங்களாகத் திகழ்கின்றன.

கோயில் காடுகள் குறித்த தொகுப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், கோயில் காடுகள் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் அரசாலும், தனியார் நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிவைச் சந்தித்து வருகின்றன. ஆகையால், அவற்றின் பல்லுயிரிய சூழலியல் முக்கியத்துவம் கருதி பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் பேராசிரியர் முனைவர் ராஜேஷ் கூறுகையில், “கோயில் காடுகள், காப்புkகாடுகள் என்றும் புனித தோப்புகள் என்றும் அழைக்கப்படுகிறது. மூன்று விதமான கோயில் காடுகள் உள்ளன.

  1. கோயிலை மையப்படுத்தி உருவாக்கப்படும் காடுகள்.
  2. ஊரின் எல்லையில் உருவாக்கப்படும் கோயில்களும், அதைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள காடுகள்.
  3. மனிதர்கள் இறந்த பின்னர் புதைக்கப்படும் பகுதிகள்.

கோயில் காடுகள் பொதுவாக அரை ஹெக்டேரிலிருந்து 20 ஹெக்டேர் வரை விரிந்து பரவி காணப்படும். இப்பகுதியில் உள்ள தெய்வங்களை ஆண்டிற்கு ஒருமுறை வந்து வழிபட்டுச் செல்வது அப்பகுதி மக்களின் வழக்கம். பொதுவாக இவை அடர்த்தியான காட்டுப் பகுதியாகவே இருக்கும். தாவரங்கள், செடிகள், கொடிகளும், அவற்றைச் சார்ந்து பல்வேறு உயிரினங்களும் இக்காட்டுப் பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

இந்தியாவில் தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில் காடுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட கோயில் காடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள மரங்களை வெட்டினால் குற்றம் என்பதை ஆன்மீகம் சார்ந்து மக்களை அறிவுறுத்தி வந்துள்ளனர்.

தற்போது அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மஞ்சமலை கோயில் காடுகள் பகுதிகளில் பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்தனர். இதில், மஞ்சமலை காட்டுப் பகுதியில் பறவைகளில் 50லிருந்து 60 சிற்றினங்கள் உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். அவற்றில் சில பறவையினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. அதேபோன்று, வெகுதுமலைப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட பறவைச் சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாம் புதிதாக மரம் ஒன்றை உருவாக்கவில்லை என்றாலும், இருக்கும் மரங்களை அழிக்காமல் இருந்தால் அவை நமக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் செய்யும்” இவ்வாறு அவர் கூறினார்.

வன தேவதை: இதனையடுத்து, மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் கூறுகையில், “மதுரையில் சுமார் 70 வகையான கோயில் காடுகள் உள்ளன. இவை பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியவையாகும். கோயில் காடுகள் வன தேவதை என்று அழைக்கப்படுகிறது. இயற்கையாக அமைந்த ஒரு காட்டுப்பகுதியை கோயிலாகக் கருதி, அதில் சிலைகள் வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

நந்தவனம் என்பது கோயில் உருவாக்கப்பட்ட பின்னர் உருவான காடுகள். கோயில் காட்டுக்குள் செல்லும் உள்ளூர் மக்கள் செருப்பணிந்து செல்வதில்லை. அங்குள்ள மரங்களை, தாவரங்களை வெட்டுவதையும், அங்குள்ள உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதை அப்பகுதி மக்கள் பாவச் செயலாக கருதுகின்றனர்.

விதை சேகரிப்பு மையம்: மதுரையில் இடையபட்டி அருகேயுள்ள வெள்ளிமலைக் கோயில் காடு முக்கியாமன கோயில் காடாகும். மேலும், இங்கு மாலைக் கோயில் காடு, தாழையூத்துக் கோயில் காடு, வேட்டைக்காரன் கருப்பசாமி கோயில் காடு, ஐயனார் கோயில் காடு என பல்வேறு கோயில் காடுகள் உள்ளன. கிராமங்களில் என்னென்ன வகையான தாவரங்கள், மரங்கள் இருந்தன என்பதற்கு வாழும் சாட்சியாயாக கோயில் காடுகள் உள்ளன. விதை சேகரிப்பு மையங்களாகவும் திகழ்கின்றன.

பசுமை பரப்பினை நீட்டிக்க வேண்டும்: தமிழர்கள் இயற்கையை சார்ந்தும், நேசித்தும் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்தக் கோயில் காடுகள் சான்று. தற்போது கோயில் காடுகள் அழியும் நிலையில் உள்ளது. எனவே, தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயில் காடுகளை கணக்கெடுக்க வேண்டும். அவற்றின் வனப்பரப்பை கணக்கெடுத்து, அதனை வனப்பரப்பிற்குள் சேர்த்து மதுரையின் பசுமைப் பரப்பினை நீட்டிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, கோயில் காடுகள் குறித்து இடையபட்டி வெள்ளிமலைக் கோயில் காட்டினைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் இளைஞர் கார்த்திக் கூறுகையில், “தமிழகத்தின் மிகப் பழமையான கோயில் காடாகவும், அதிக பரப்பளவைக் கொண்ட காடாகவும் வெள்ளிமலைக் கோயில் காடு திகழ்கிறது. இந்தக் கோயில் காட்டுக்குள் பல்வேறு பழமையான மரங்களின் கீழ் தெய்வ சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன.

வெள்ளிமலை கோயில் காடு: அதிலொன்றுதான் கடம்ப முனி. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்காடுகள், இப்பகுதியில் உள்ள 10 கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளன. ஏறக்குறைய 600 ஏக்கராக இருந்த இந்த கோயில் காடு தற்போது 300 ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்தக் காட்டை பல்லுயிர்த்தனமாக அறிவிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வெள்ளிமலை கோயில் காட்டை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

தாவரவியல் ஆய்வாளரும், நறுங்கடம்பு என்ற நூலின் ஆசிரியருமான கார்த்திகேயன் கூறுகையில், “தமிழகத்தில் சமவெளிக் காட்டில் 400க்கும் மேற்பட்ட கடம்பமரம் சூழ்ந்து கடம்ப வனமாய்த் திகழ்வது இடையபட்டி வெள்ளிமலைக் கோயில் காடு.

இங்கு கடம்பமரம் தவிர்த்து, உசிலை, குருந்தம், நெய்க் குருந்தம், பராய், சிலைவாகை, குறிச்சி, அழிஞ்சில், பூவந்தி போன்ற அரிய மரங்களும், காந்தள், விழுதி, விராலி, மருள், காட்டுச் சுண்டை, சிறுகுறிஞ்சான், சிவனார் வேம்பு, நீர்முள்ளி, கள்ளிமுனையான் போன்ற மருத்துவ குணம் நிறைந்த மூலிகைளும், தேவாங்கு, முள்ளெலி, எறும்புத்திண்ணி, காட்டுப்பன்றி, மான், முயல் போன்ற அரியவகை உயிரினங்கள் நிறைந்த காடாகவும் திகழ்கிறது” என்றார்.

வனப்பரப்புக்குள் உள்ள கோயில் காடுகள் பாதுகாக்கப்பட்டதாக உள்ளன. ஆனால், அதற்கு வெளியே உள்ளவை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, இந்து அறநிலையத்துறை ஆகியவற்றின் கீழ் இருக்கின்ற காரணத்தினால், அக்குறிப்பிட்ட காடுகள் தரிசு நிலமாகக் குறிக்கப்பட்டு, ஐடி பார்க், சிறைச்சாலை விரிவாக்கம், தொழிற்பேட்டைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன.

தற்போது பல கோயில் காடுகள் அழியும் நிலையில் உள்ளன. தமிழ்நாடு அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, கோயில் காடுகளையும், அதன் வனப்பரப்பையும் கணக்கெடுத்து பாதுகாக்க முன் வர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டான மெக்கானிக்கல் பென்சில் தினம் இன்று! இதன் வரலாறு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.