ETV Bharat / state

தேனி: திருவிழா முதல் இறுதிச் சடங்கு வரை.. பாலம் இன்றி 25 வருடங்களாக அவதியடையும் கிராம மக்கள்! - Vaigai dam bridge issue - VAIGAI DAM BRIDGE ISSUE

Vaigai dam bridge issue: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வைகை அணை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து கிராம மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Vaigai dam bridge issue
Vaigai dam bridge issue
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 1:20 PM IST

தேனி வைகை அணை பிரச்சனை

தேனி: வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக நீர் கொண்டு செல்வதற்காக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எ.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான எ.புதூர், மறுகால்பட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களை ஒட்டி உள்ள பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.

இதனால், வெட்டப்பட்ட வாய்க்காலின் மறு கரையில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு செல்வதற்கும், இறந்தவர்களின் உடல்களை மயான கரைக்கு செல்வதற்கும், திருவிழா காலங்களில் வைகை ஆற்றில் சென்று சுவாமிகளை அலங்காரம் செய்து வருவதற்கும், சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பாலம் கட்டித்தர மீண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீர் பாசன வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்படாததால் பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதோடு, கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரையில் பாலம் கட்டப்படவில்லை. இதனால், வாய்க்காலின் மேல் புதிய பாலம் கட்டி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பாசன கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பி மீது தற்காலிகமாக விவசாயிகள் நடந்து செல்கின்றனர். இதுவும் ஆபத்து என்பதால் துரிதமாக பாலம் கட்டித்தருவதே தீர்வாகும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயி முத்துப்பாண்டி கூறுகையில், “ 25 வருடங்களாக பாலத்திற்காக நாங்கள் போராடி வருகிறோம். தற்போது சித்திரை திருவிழா நடைபெற்ற வருகிறது. ஆனால், சாமி கொண்டு செல்வதற்கு சிரமாக உள்ளது. இதுமட்டுமின்றி இறந்தவர்களை கொண்டு செல்வதற்கும், விவசாயத்திற்கும் 10 கிலோ மீட்டர் சுற்றி வரக்கூடிய நிலை உள்ளது. எனவே, நீர் பாசன வாய்க்காலின் மீது பாலம் அமைத்து தர கேட்டுக்கொள்கிறோம்” என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது என்ன? - Schools Education Department

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.