தூத்துக்குடி : தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாகவே விட்டு, விட்டு சாரல் மழையும், கனமழையுமாக பெய்து வந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய மழை நீர் பி&டி காலனி, கதிர்வேல் நகர் போன்ற பகுதிகளில் சூழ்ந்தது.
இதையும் படிங்க : தாமிரபரணி ஆற்றில் உடைந்த 33 உறை கிணறுகள்.. 5 மாவட்டங்களுக்கு தடைபட்ட குடிநீர் விநியோகம்..!
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர். தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மின் மோட்டார்களை பயன்படுத்தி மழைநீரை வெளியேற்றி வருகின்றது.