ETV Bharat / state

அண்ணாமலை எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை, மக்களைத் திசை திருப்பவே இந்த நடவடிக்கை - பால் கனகராஜ் - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha election 2024: அண்ணாமலை எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை மக்களைத் திசை திருப்பவே காவல்துறை மூலம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஈ டிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்தியேக பேட்டியளித்துள்ளார்.

அண்ணாமலை எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை, மக்களை திசை திருப்பவே இந்த நடவடிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 8:11 PM IST

அண்ணாமலை எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை, மக்களை திசை திருப்பவே இந்த நடவடிக்கை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், எண்ணூர், எர்ணாவூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வெளி வாகனத்தில் வந்த பால் கனகராஜ், எர்ணாவூர் எரணீஸ்வரர் கோயில் பஜனை கோயில் தெரு, காமராஜர் நகர் மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முருகப்பா நகர், ராமநாதபுரம் ஜோதி நகர் அதனைத் தொடர்ந்து ஆறாவது வார்டு பகுதியான சண்முகபுரம் சந்திப்பு, ராஜா சண்முகம் நகர் கலைஞர் நகர் போன்ற பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது எர்ணாவூர் பகுதியில் பெண்கள் வேட்பாளர் பால் கனகராஜுக்கு ஆரத்தி எடுத்தனர் வரவேற்றனர். பிரசாத்தை முடித்து பால் கனகராஜ், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்திக் கொடுப்பதற்காகவும் மக்களுடைய முக்கிய பிரச்சனையைச் சரி செய்ய 25 வாக்குறுதிகள் தயார் செய்து மக்களுக்கு அளித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

பின்னர் திமுக 11 முறையும், அதிமுக 1 முறையும் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் மூலமாக அப்பகுதியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டை பெற்றுக் கொண்டு மக்களுக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயக்குமாரின் தோல்விக்கு அவரே காரணம் என தெரிவித்தார்.

ஜெயக்குமாரின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தோல்வி அடைந்ததாகக் கூறியவர், பாஜக பாஜகவினால் தான் தோல்வி அடைந்ததாகக் கூறும் ஜெயக்குமார் இதை ஏன் தோற்ற உடனே தெரிவிக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகிய பிறகு ஏன் குற்றச்சாட்டு தெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். தற்போது தோல்வி பயம் வந்துள்ளதால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

மேலும் கோவையில் பிரச்சாரம் நேரம் முடிந்து அண்ணாமலை எந்த பிரச்சாரமும் செய்யவில்லை எனவும், என்ன செய்ய வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலைக்குத் தெரியும் எனவும் கூறினார். மேலும் பிரச்சாரம் நேரம் முடிந்த பிறகு வாகனத்தில் செல்லும் போது தனிப்பட்ட முறையில் மக்களைப் பார்த்ததும் தன் கைகளை அசைத்துக் காட்டினார் இது தேர்தல் விதிமீறலில் வராது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது எனக் குற்றம்சாட்டினார். மேலும் இது போன்ற புகார்கள் காவல்துறை மூலமாக மக்களின் திசை திருப்பும் முயற்சியாகும். அனுமதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று நேரமின்மை காரணமாகப் பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட அண்ணாமலை, எந்தவித பிரச்சாரமும் இன்றி மக்களைப் பார்த்து கையை அசைத்தது எந்த விதிமுறைகளும் ஆகாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 32வது முறையாக நீட்டிப்பு! - Former Minister Senthil Balaji Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.