ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் படுகொலை; நினைவேந்தல் பேரணிக்கு பா.ரஞ்சித் அழைப்பு! - Armstrong Murder issue - ARMSTRONG MURDER ISSUE

Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் நினைவேந்தல் பேரணிக்கு இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங், பா.ரஞ்சித்
ஆம்ஸ்ட்ராங் மற்றும் பா.ரஞ்சித் (Credits - Pa.Ranjith, Neelam Production X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 4:37 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி நீலம் பண்பாட்டு மையம் சார்பில், நினைவேந்தல் பேரணிக்கு இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும்.

தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா. இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் 'அம்பேத்கரியம்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம்.

நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல. சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, இவ்விழப்பு ஒரு குடும்பத்திற்கோ, இயக்கத்திற்கோ நேர்ந்ததாகக் கருதாமல் நம் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் நேர்ந்த இழப்பு எனப் பறைசாற்றுவோம். சாதி, மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆம்ஸ்ட்ராங்.

அவர்களின் செயற்பாடுகளை நினைவிலேந்தி வரும் 20ஆம் தேதி மாலை 3 மணி அளவில் சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி, கட்சி பாகுபாடு இல்லாமல் அணி திரள்வோம்.

வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம். அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம், வாருங்கள்” என அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ் எப்போ ரிலீஸ் தெரியுமா? - Chutney Sambar Web Series

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.