ETV Bharat / state

அக்டோபர் 17 தேதி குறிச்சாச்சு.. ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுவது என்ன? - OPS supporters criticizes EPS - OPS SUPPORTERS CRITICIZES EPS

OPS supporters criticizes EPS: துரோத்திற்கு எடப்பாடி பழனிசாமி பொருத்தமானவர், ஆயிரம் வருடம் ஆனாலும் துரோகம் என்று சொன்னால் அது எடப்பாடி தான் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மருது அழகுராஜ் மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியுள்ளனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 3:17 PM IST

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மருது அழகுராஜ் மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமிக்கும், தோல்விக்கும் தான் போட்டி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்பவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

சட்டமன்றத்தில் ஏன் கோடநாடு விவகாரம் பற்றி பேசவில்லை, ஏன் அச்சப்படுகிறீர்கள் எனவும், அதுமட்டுமல்லாமல் 90 நாட்களில் கோடநாடு வழக்கை முடிப்போம் எனக் கூறிவிட்டு, தற்போதைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, கோடநாடு வழக்கை மாநில அரசு விசாரித்தால் ஒருபோதும் உண்மை வெளிவராது. அதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும், அதற்கான நடவடிக்கை எடுப்போம். மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்தது தோல்வி அல்ல, வீழ்ச்சி என்றும் விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக அதிமுகவிற்கு மூன்று முதலமைச்சர்களை பெற்றுத் தந்த தொகுதியான தேனி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியடைந்துள்ளனர்.

எடப்பாடி அணியினர் பல்வேறு தொகுதிகளில் மூன்றாம் இடம், நான்காம் இடம் பெற்று இருக்கிறார்கள். வருகிற அக்டோபர் 17ஆம் தேதியோடு எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் என்றும், அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு மற்ற அனைவரும் ஒன்று சேர்வார்கள் என்றார்.

எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கரன்சி மட்டுமே. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக பெற்ற வாக்குகளை விட ஓபிஎஸ் சுமார் நான்கு மடங்கு வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளார். துரோகத்திற்கு எடப்பாடி பழனிசாமி பொருத்தமானவர், ஆயிரம் வருடம் ஆனாலும் துரோகம் என்று சொன்னால் அது எடப்பாடி தான்.

மேலும், திமுகவின் குலசாமி எடப்பாடி என்றும், திமுகவின் வெற்றிக்கு அவர்கள் முழுமையாக நம்புவது எடப்பாடியை தான் என்றும் கூறினார். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற திமுக, அண்ணா, கருணாநிதி நினைவிடம் சென்று வணங்கியதை விட, எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை வைத்து தான் வணங்கினார்கள்" என்று தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, பாஜகவிடம் வரதட்சணை வாங்கிக் கொண்டு தாலி கட்டாமல் ஓடி வந்த கதை தான் எடப்பாடி கதை என்றும் விமர்சனம் செய்தார். இரட்டை இலை சின்னம் என்றால் வெற்றி தான், 43 சதவீத வாக்குகளை ஜெயலலிதா விட்டுச் சென்றார், எடப்பாடி அணியினர் அனைத்தையும் தொலைத்து விட்டார்கள்.

எடப்பாடிக்கும், திமுகவிற்கும் நெருங்கிய பிணைப்பு உள்ளது. மேலும், மத்திய வனத்துறை, மத்திய சுற்றுச்சூழல், மாநில மின்சாரத்துறை உள்ளிட்டவை தான் கோடநாடு கொலை, கொள்ளைக்கு காரணம். இந்நிலையில் ஏன் கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவில்லை" என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலை; 'சரண்டர் ஆகக் கூறும் நிலை..காவல்துறையிலும் கருப்பு ஆடுகள்' - அண்ணாமலை சாடல் - Armstrong murder case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.