ETV Bharat / state

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி நிர்வாகி கார் ஏற்றி கொலை.. போலீசார் விசாரணை! - OPS supporter murder

OPS Supporter murder in Thoothukudi: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கர் கணேஷ்
நல்லக்கண்ணு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 12:21 PM IST

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரைச் சோ்ந்தவர் நல்லகண்ணு (50). இவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலராக உள்ளார். இந்நிலையில், இவர் நேற்று (பிப்.17) மாலை ஸ்ரீவைகுண்டம் - சுப்பிரமணியபுரம் சாலையில் வந்தபோது, அவரை மர்ம நபர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், டிஎஸ்பி மாயவன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று கொலை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நல்லக்கண்ணுவுக்கும், ஆதிச்சநல்லூா் ஊராட்சி முன்னாள் தலைவர் சங்கர் கணேஷ்-க்கும் (42) இடையில் முன் விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், சங்கர் கணேஷ் மனைவி பார்வதி ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை சங்கர் கணேஷ் காரில் வந்து கொண்டிருந்த நிலையில், நல்லக்கண்ணு அவரை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் சங்கர் கணேஷ், நல்லக்கண்ணுவை கார் ஏற்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது, கொலைச் சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சங்கர் கணேஷை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "மோடியை போன்று நாடாளுமன்றத்தை அவமதித்த பிரதமர் உலகத்திலேயே யாரும் இல்லை" - ஆ.ராசா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.