நீலகிரி: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி அதன் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களாக மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரியின் மலை சார்ந்த பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மலை ரயில் செல்லும் தண்டவாள பாதை மீது தண்ணீர் அருவி போல் கொட்டி வருகிறது. அது மட்டுமின்றி மலை ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்தது.
அதனால் நேற்று (அக்.16) மற்றும் இன்று (அக்.17) ஆகிய இரண்டு நாட்கள் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.. டிக்கெட் முன்பதிவு கால அவகாசம் 60 நாட்களாக குறைப்பு!
இந்நிலையில் இன்று குன்னூர் ஊட்டி இடையான மலை இரயில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு மீண்டும் குன்னூர் ஊட்டி இடையே மலை இரயில் சேவை துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் மழை ரயிலில் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தில் 200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இயற்கை காட்சிகளை ரசித்தவாறு தங்கள் பயணத்தை மேற்கொண்டு மகிழ்ந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்