ETV Bharat / state

'ரூட்டு தல' மோதலால் மாணவர் கொலை! மேலும் மோதலை தடுக்க போலீஸ் உஷார் - CHENNAI COLLEGE STUDENT KILLED

சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவர் ரூட்டு தல மோதலால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மோதலை தடுக்கும் விதமாக சென்னை முழுவதும் கல்லூரி மாணவர்கள் கண்காணிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலையான மாணவர்
கொலையான மாணவர் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 1:25 PM IST

Updated : Oct 9, 2024, 1:33 PM IST

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சுந்தர் என்ற மாணவர் இன்று காலையில் மரணமடைந்தார். மாநிலக்கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியல் படித்து வரும் இவர், கடந்த 4ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடந்த மோதலில் காயமடைந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற இந்த மோதலில் பலர் ஒன்று கூடி சுந்தரை தாக்கியுள்ளனர். சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடைபெற்ற இந்த மோதலில் படுகாயமடைந்து கிடந்த சுந்தரை, பொதுமக்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

காதில் ரத்தம் வடிந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட சுந்தரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து கண்காணித்து வந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் 6 நாட்களுக்குப் பின் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் சுந்தர் மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்த மோதல் தொடர்பாக 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுந்தர் மரணமடைந்த நிலையில், மோதல்களை தவிர்ப்பதற்காக மாநிலக்கல்லூரிக்கு திங்கட்கிழமை விரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள்
கைதானவர்கள் (Credits - ETV Bharat Tamilnadu)

தாக்குதலில் ஈடுபட்டதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான ஈஸ்வர் (19) ,யுவராஜ் ( 20 ) , சந்துரு ( 20), ஹரி பிரசாத் என்கிற புஜ்ஜி (20), கமலேஸ்வரன் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொலையாத ரூட்டு தல: சென்னை அரசு கல்லூரி மாணவர்களிடையே குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தில் பயணிப்பவர்களை வழிநடத்துபவராக ரூட் தல எனும் மாணவர் குறிப்பிடப்படுகிறார். கடந்த காலத்தில் பஸ் டே என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடந்தாலும், பல நேரங்களில் வன்முறையில் சென்று முடிவதால் ரூட் தல விவகாரத்தை போலீசார் கவனமாக கண்காணித்து வருகின்றனர். பஸ் டே கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளிடையே மோதல்: மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி, மாநிலக்கல்லூரி என அரசு கல்லூரிகளின் மாணவர்களிடையே மோதலும் தீராததாக இருக்கிறது. காரணமின்றி குழுவாக மோதிக் கொள்ளும் இந்த வன்முறைகள் பல மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Last Updated : Oct 9, 2024, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.