ETV Bharat / state

நாம் தமிழர் கட்சி - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியா? - புஸ்ஸி ஆனந்த் பதில்! - TVK Gave Free Food - TVK GAVE FREE FOOD

Tamilaga Vettri Kazhagam providing food for poor: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் உணவு வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய் மற்றும் பொதுமக்கள் புகைப்படம்
நடிகர் விஜய் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் (CREDIT - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 4:38 PM IST

Updated : May 28, 2024, 7:35 PM IST

சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, இன்று (மே 28) தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ஏழை எளியோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று உணவுகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

புஸ்ஸி ஆனந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில், சென்னை திருவான்மியூரில் உள்ள தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் காலை மற்றும் மதிய உணவு அளித்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களில் கட்சி நிர்வாகிகள் சமபந்தி விருந்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

இனி வரும் காலங்களில் கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்ச்சி, காதணி நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திருமண மண்டபத்தில் நடைபெறும் போது ஆதரவற்றோர், முதியவர்கள் ஆகியோரை அழைத்து உணவு பரிமாற வேண்டும். திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, மீதமாகும் உணவை வீணாக்காமல் திருமண மண்டப மேலாளர் கட்சி நிர்வாகிகளை அலைபேசியில் அழைத்து தகவல் கூறினால், அந்த உணவை அவர்கள் பாக்கெட்டில் பேக் செய்து ஆதரவற்ற முதியவர்களுக்கு விநியோகம் செய்வர்.

விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாகச் செய்வோம். பொதுக்கூட்டம் உள்ளிட்ட எந்த விஷயமாக இருந்தாலும், கட்சித் தலைவர் விஜய் முடிவை அறிவிப்பார், அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

2026 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “எதுவாக இருந்தாலும் கட்சித் தலைவர் முடிவை அறிவிப்பார். கடந்த ஆண்டு முதல் மூன்று இடத்தில் பிடித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். கடந்தாண்டு சில குளறுபடிகள் நடைபெற்றதால், இந்த ஆண்டு எவ்வித பிரச்னையுமின்றி, அனைவருக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.

இதே போல் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் குட்டி கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், தயிர் பச்சடி, ஊறுகாய், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள், அன்னதானத்தைப் பெற்று அங்கேயே அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

இதேபோல், வேலூர் பழைய பேருந்து நிலையம், திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகம் சார்ப்பில் மாவட்ட தலைவர் வேல் முருகன் தலமையில், சுமார் 1,000க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், வடை மற்றும் மதிய உணவாக வெஜ் பிரியாணி, தயிர் சாதம், சாம்பார் சாதம், லெமன் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது.

தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் எதிரே, ஒன்றிய நகர மற்றும் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செங்கம் ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பாசக்கார உரிமையாளர்.. நெல்லையில் நெகிழ்ச்சி! - PET COCK DEATH BANNER

Last Updated : May 28, 2024, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.