ETV Bharat / state

பிரபல தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை; மதுரையில் பகீர் சம்பவம்! - Old woman murdered in Madurai - OLD WOMAN MURDERED IN MADURAI

Madurai Old woman murdered: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் பணியாளரான மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை குறித்த சித்தரிப்புப் படம்
கொலை குறித்த சித்தரிப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 12:56 PM IST

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆறு தளங்களைக் கொண்டுள்ள இந்த மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களைப் பார்க்க வருகின்ற பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு மருத்துவமனை உணவகத்தில் பணிபுரியும் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி முத்துலெட்சுமி என்பவர் ஆறாவது தளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், மாட்டுத்தாவணி பேருந்து நிலைய காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூதாட்டி அணிந்திருந்த தங்க நகை காணாமல் போன நிலையில், நகையை திருடுவதற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மதுரையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "விளிம்புநிலை மக்களுக்காக போராடுபவர்களின் பாதுகாப்பிற்கு தனிச் சட்டம் வேண்டும்" - ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்! - Lawyer protest in Madras High Court

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.