ETV Bharat / state

மயிலாப்பூர் ரயில் நிலைய கொலை.. சிசிடிவி-யில் தெரிந்த நபரை வைத்து கொலையாளியை பிடித்த போலீஸ்! - MYLAPORE RAILWAY STATION MURDER

மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் மாடியில் இருந்து எக்ஸ்லேட்டர் மேல் தள்ளி கூலித் தொழிலாளியை கொன்ற முதியவரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைதான சேட்டுவிடம் விசாரிக்கும் காவலர்
கைதான சேட்டுவிடம் விசாரிக்கும் காவலர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2024, 4:43 PM IST

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். கடந்த 8 ஆம் தேதி மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள எக்ஸ்லேட்டர் படிக்கட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்த பயணி ஒருவர் உடனே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த திருவான்மியூர் ரயில்வே போலீசார் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி காட்சியில் அம்பலம்

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சிசிடிவி காட்சியில் அடையாளம் தெரியாத இருவர் ரயில் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதும், அப்போது அதில் ஒருவர் மற்றொருவரை பிடித்து தள்ளியதில் எக்ஸ்லேட்டரில் விழுந்து காயம் ஏற்பட்டு பலியானது தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து கொலையுண்ட நபர்‌ யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் தப்பி சென்ற கொலையாளி யார் என்பது குறித்து தீவிர புலன் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த நபர் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த லூயிஸ் ஆரோக்கியராஜ் (40) என்பது தெரிய வந்தது.

தள்ளிவிட்டு கொன்றது யார்

மேலும், மது பழக்கத்திற்கு அடிமையான ஆரோக்கியராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி கடந்த 10 ஆண்டுகளாக கோவில் வாசல், பிளாட்பாரத்தில் தங்கி, கிடைக்கும் வேலையை செய்து அதில் வரும் பணத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் ஆரோக்கியராஜ் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துடன் அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கொலை வழக்கு தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது முதியவரான சேட்டு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்து விட்டு இவர் தப்பி ஓடி விட்ட நிலையில் அந்த தகராறின் போது உடன் அருகில் ஒருவர் இருந்துள்ளார். அதுவும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. அவரை கண்டுபிடித்து விசாரித்து போலீசார் கொலையாளி சேட்டை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தகவல் தெரிவிக்கையில், மதுபோதையில் தான் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு லூயிஸை கைதான சேட்டு மேலே இருந்து கீழே தள்ளி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொல்லப்பட்டவர் யார் என்று கூட கைதான சேட்டுக்கு தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பிறகு கைதான சேட்டை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.