ETV Bharat / state

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா? - LPG Gas Cylinder Price - LPG GAS CYLINDER PRICE

LPG Gas Cylinder Price: வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் கடந்த மாதம் ரூ.1960.50 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.30.50 குறைந்து ரூ.1930 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

LPG Gas Cylinder Price
LPG Gas Cylinder Price
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 9:19 AM IST

சென்னை: சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு உபயோக பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் கேஸ் விலை குறித்த அறிவிப்பைப் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எதிர்பார்த்துக் காத்து இருப்பர். இந்த நிலையில், கடந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியானது, இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதன் காரணமாக, கேஸ் விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனக் கூறப்பட்டது.

வணிக சிலிண்டர்களின் விலை: இந்த நிலையில் 19 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் கடந்த மாதம் 1960.50 ரூபாய் இருந்தது. இந்த விலை தற்போது ரூ.30.50 குறைந்து ரூ.19.30 விற்பனை செய்யப்படுகிறது.

தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை தலா ரூ.100 குறைப்பதாக கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார். மகளிர் தின பரிசாகவும் இது இருக்கும் என்று பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.818 விற்பனையாகிறது. 30 ரூபாய் கேஸ் விலை குறைந்திருப்பதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வடிவேலு பாணியில் நாய்களுக்கு பிஸ்கட் போட்டு சைக்கிளை திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.