ETV Bharat / state

சுமார் ஒன்றரை லட்சம் வாக்காளர்கள் பெயர் எங்கே போனது? வெளியான அதிர்ச்சித் தகவல்! - VELLORE VOTER NAME LIST

வேலூர் மாவட்டத்தில் சுமார் 1.23 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது குறித்து செய்தியைக் கேட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரான பிரகாஷ், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிப்பதாக தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

Vellore voter name list
வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அதிகாரி பிரகாஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2024, 12:10 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அதிகாரி பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில், வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். இதில் அரசியல் கட்சியினர் உயிருடன் உள்ளவர்கள், ஒரு பகுதியில் ஒரே பெயரில், ஒரே பாலினம் ஆகியவற்றில் இருந்தால் அவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டி, இந்த பெயர் நீக்கம் குறித்து விளக்கம் கேட்டு வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் நோட்டீஸூம் ஆங்கிலத்தில் உள்ளதால், அது என்னவென்று கிராமப்புற மக்களுக்கும் புரியவில்லை எனவும் எடுத்துக் கூறினார்கள்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு என ஐந்து தொகுதிகளில் மொத்தம் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 சதவிகிதம் தேர்தல் ஆணையத்தால், அதாவது சுமார் 1.23 லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஒரே ஊரில் ஒரே பெயரில் ஐந்து பேர் இருந்தாலும், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யப்படுவதால் கிராம மக்கள் வாக்காளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்கள்.

இதையும் படிங்க: வயநாடு மட்டுமல்ல.. 10 மாநிலங்களில் இன்று சட்டமன்ற இடைத்தேர்தல்... விறுவிறுக்கும் வாக்கு பதிவு..!

அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தேர்தல் அதிகாரி பிரகாஷ் பேசுகையில், "தமிழ்நாட்டிலேயே 10 சதவிகிதம் வாக்காளர்கள் போலி வாக்காளர்கள் என சுமார் 1.23 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டது, ‘இங்கு மட்டும் தான் நடக்கும் போல’ என அதிர்ச்சியடைந்து கூறினார். மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவலைத் தெரிவிப்பதாக கூறினார்.

மாநிலம் முழுவதும் இந்த ஒரே பெயர் வேறு இடத்தில் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் நீக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6 கோடி வாக்காளர்களில் இதேபோல் 45 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான தகவலாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.