ETV Bharat / state

"31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பா? முதல்வர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரவுள்ளேன்" - சீமான் எச்சரிக்கை! - NTK Seeman

31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறியுள்ளனர், இது தவறாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடரவுள்ளேன் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் நாதக சீமான் புகைப்படம்
முதல்வர் ஸ்டாலின் மற்றும் நாதக சீமான் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 2:03 PM IST

திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு அருகே உள்ள அருள்மிகு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் சிவாச்சாரியார் தல புராணங்களை விளக்க,அதனைக் கேட்டறிந்தார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், "தொடர்ச்சியாகத் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதும் அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. வலிமையான கடற்படை வைத்திருக்கும் மத்திய அரசு தமிழக மீனவர்களை காக்க மறுக்கின்றனர்.

மீனவர்களது வாக்கு தேவை ஆனால் அவர்களது வாழ்க்கையும் பற்றியும் அவர்களது உயிரைப் பற்றியும் மத்திய அரசும், மாநில அரசும் கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கேரள மீனவர்களும் அவ்வப்போது எல்லை தாண்டி செல்கின்றனர்.

ஆனால் அவர்கள் கைது செய்யப்படுவதோ அல்லது சுடப்படுவதோ கிடையாது. நான் நெய்தல் படை அமைப்பேன் என கூறிய போது பலரும் சிரித்தனர். இப்போது கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் அதைக் கட்டமைத்துள்ளார்.

பிரதமர் மோடி உக்ரைன் நாட்டை பார்க்கவில்லை போல என நினைக்கிறேன். அதனால்தான் அந்தநாட்டை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டிஆர்பி ராஜாவும் 10 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், அதன் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தகவல் கேட்டுள்ளேன். ஒருவேளை இருவரும் கொடுத்த தகவல் தவறாக இருப்பின் அவர்கள் இருவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளேன் என்றார். தொடர்ந்து நடிகர் விஜய் குறித்துப் பேசிய அவர், வருகிற செப்டம்பர் மாதம் விஜய் மாநாடு போட்டு, அவருடைய கட்சிக் கொள்கை உள்ளிட்டவற்றை அறிவிக்க உள்ளார்.

அப்போது கேளுங்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் உடன் கூட்டணி வைப்பீர்களா இல்லையா என்று. விஜய்யின் கட்சிக் கொடி குறித்த சர்ச்சை எழுந்து இருக்கின்றது, அதில் இருக்கும் யானை என்பது அனைவருக்கும் சொந்தமானது. என்னை விமர்சனம் செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது விஜயை விமர்சனம் செய்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிவராமன் மரணம்; சந்தேகம் கிளப்பும் அதிமுக, பாஜக.. சந்தேகமே இல்லை என ஆணித்தரமாக நிற்கும் நாதக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.