ETV Bharat / state

“திருமாவளவன் சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டார்” - சீமான்! - SEEMAN

கர்நாடக, கேரள மாநிலங்களின் பிறப்புக்கு வாழ்த்து சொன்ன விஜய் ஏன் தமிழுக்கு சொல்லவில்லை? என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் மற்றும் சீமான்
விஜய் மற்றும் சீமான் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 3:44 PM IST

Updated : Nov 2, 2024, 6:02 PM IST

சென்னை: சுப. தமிழ்ச்செல்வன் 17ஆம் ஆண்டு நினைவு தினத்தை அவரது உருவப் படத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறுகையில், “விஜயின் அடிப்படையே தவறாக உள்ளது. கர்நாடக, கேரள மாநிலங்களின் பிறப்புக்கு வாழ்த்து சொன்ன விஜய் ஏன் தமிழுக்கு சொல்லவில்லை? கூட்டம் கூடினால் போதுமா? எனக்கு 36 லட்சம் பேர் கூடினார்கள். விஜயகாந்துக்கு மதுரையில் கூடாத கூட்டமா? என கேள்வி எழுப்பினார். மேலும், விஜயின் கொள்கையில் உடன்பாடு இல்லை, முரண்பாடு இருக்கிறது.

விஜய்க்கு ஓட்டு போடுபவர்கள் எனக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்? என்னுடைய கொள்கையை ஏற்பவர்களே எனக்கு ஓட்டு போடுவர். யாருடைய வாழ்க்கையையும் யாரும் பிரிக்க முடியாது. விஜய் அவர் கொள்கையின் உறுதியாக நின்று வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.

தொடர்ந்து திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என தவெக தலைவர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு "விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாகும். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்று கொள்கை. தமிழ் தேசியம் என்றால், என்ன திராவிடம் என்றால் என்ன என்பது குறித்து தலைவர் கூறுவாரா அல்லது கட்சியில் உள்ள பிறர் கூறுவார்களா?

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடை ஏற்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா? அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா? திராவிடத்தின் பிதாமகன் பெரியார் என்ன சொல்கிறார். தெருவுக்கு இரண்டு மதுக்கடைகளை திறந்தது திராவிடம். திமுக வின் சமூக நீதி சமுக்காள நீதி கூட கிடையாது.

சீமான் செய்தியாளர் சந்திப்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: தவெக கொள்கை அழுகிய கூமுட்டை; கருவாட்டு சாம்பார்.. 'இட்ஸ் வெரி ராங் ப்ரோ' என விஜயை விளாசிய சீமான்!

பெரியாரும், அம்பேத்கரும் ஏன் கடவுள் மறுப்பிற்கு வந்தனர். பிறப்பின் அடிப்படையில் பேதம் இல்லை. காங்கிரஸ் வரலாற்று பகைவன். தமிழினத்தின் பகைவன். நாம் எல்லாம் எதிர்ப்பது நீட், ஜிஎஸ்டி, என்.ஐ.ஏ, என்.ஆர்.டி போன்ற அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ்.

பிஜேபி மதவாதம் காங்கிரஸ் மிதவாதமா? என கேள்வி எழுப்பினார். மேலும் பிஜேபி சவுண்டு இந்துத்துவா என்றால் காங்கிரஸ் சைலண்டு இந்துத்துவா. தாய் தந்தையாக இருந்தாலும் எதிரி எதிரி தான். குடும்ப உறவை விட கொள்கை உறவு தான் மேலானது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆளுநர் பதவி வேண்டாம் என்பதை அண்ணா சொல்லியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்படாத ஒரு நியமன உறுப்பினருக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினருக்கான அதிகாரம் உள்ளது எங்கே உள்ளது. கீழ்ப்பாக்கத்தில் இருப்பவரை எல்லாம் ஆளுநராக நியமித்திருக்கின்றனர். திராவிடம் 75 ஆண்டுகளாக வலிமையாக இருக்கிறது அடுத்த தலைமுறை அதற்கு அடுத்த தலைமுறை தலைவர்கள் தயாராக உள்ளனர்.

விஜயும் திருமாவளவன் ஒரே மேடையில் ஏறி கூட்டணி அமைக்கப் போவதாக கூறப்படுகிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "அண்ணன் திருமாவளவன் சிறுபிள்ளைத்தனமான செயல் எல்லாம் செய்ய மாட்டார். எனக்கு பாடம் நடத்திய வாத்தியார் அவர். அது போன்ற தவறுகளை செய்ய மாட்டார்.

எங்கள் கடவுள் முருகனின் தைப்பூசத்திற்கு விடுமுறை இல்லை. குருநானக், மகாவீரர் ஜெயந்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்று அனைத்து நாட்களுக்கும் விடுமுறை உள்ளது. முதல் முறையாக இக்கோரிக்கையை ஜெயலலிதாவிடம் வைத்தேன். அவர் நிராகரித்து விட்டார். எடப்பாடி பழனிசாமியிடமும் வைத்தேன் அவரும் நிராகரித்து விட்டார்" என தெரிவித்தார்.

Last Updated : Nov 2, 2024, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.