ETV Bharat / state

"தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு.. மக்களின் மனதை வெல்வதே எங்கள் கனவு"- சீமான்! - NTK Chief Coordinator Seeman

NTK Chief Convener Seeman: தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு, மக்களின் மனதை வெல்வதும், சிந்தனையை வெல்வதும் தான் எங்கள் கனவு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படம்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 16, 2024, 9:34 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளின் சகோதரி திருமண விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது, "என்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் என்னுடைய தங்கையின் திருமணம் ஆகும். முதன்முதலாக நாகப்பட்டினத்தில் வேளாண்குடி மக்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்காக மணியரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் என்னுடைய தங்கை காளியம்மாள் பங்கேற்று பேசினார்கள்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அவர் பேசிய பேச்சைக் கேட்டு நான் அவரிடத்தில் பேசினேன். மீனவர் சொந்தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அவர்களின் பாதுகாப்பான எதிர்கால நல்வாழ்க்கைக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி இயங்கிக் கொண்டிருந்தவர் அவர்.

அப்போது மீனவ சொந்தங்களின் இன்னல்களை நானும் அறிவேன். காளியம்மாளும் அதை எடுத்து பேசிக்கொண்டே இருந்தார். நீ பேச வேண்டிய இடம் இந்திய நாடாளுமன்றம் எனக் கூறி வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் நிறுத்தி இருந்தேன். வடசென்னைக்கு தொடர்பு இல்லை என்றாலும் பெருவாரியான வாக்குகளை மக்கள் அளித்திருந்தார்கள். நாங்கள் நாடாளுமன்றத்தில் போய் பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசி வருகிறோம்.

தேர்தலில் வெல்வது இல்லை எங்கள் கனவு. மக்களின் மனதை வெல்வதும், சிந்தனையை வெல்வதும் தான் எங்கள் கனவு. நாம் தமிழர் கட்சியில் சீமானை பார்த்து பயப்படுகிறார்களோ இல்லையோ காளியம்மாளை பார்த்து பயப்படுகிறார்கள்.

மேதகு பிரபாகரன் காட்டிய வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலாக வென்று முடிக்க வேண்டும் என பேராவலில் அவருடைய பிள்ளைகள் நாங்கள் களத்தில் பாய்கின்றோம். என் தோளுக்கு துணையாக என் படைக்கு வலிமைமிக்க தளபதியாக என்னுடைய சகோதரி காளியம்மாள் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைக்கு பெரும் கடமையும் பொறுப்பும் உங்களது பிள்ளைகளால் எங்களது தோல்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது. உயர்ந்த லட்சிய நோக்கம் உள்ளது. அதனை அடைய பொருளாதார வலிமையோ, ஊடக வலிமையோ இல்லை. உழைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: விவசாயிகள் இனி கவலை வேண்டாம்: விவசாய கருவிகள், இயந்திரங்களை வாடகைக்கு பெற புதிய வசதி அறிமுகம்! - Agricultural products for rent

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.