ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை: திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கவும் - மாவட்ட ஆட்சியர்! - NORTHEAST MONSOON THOOTHUKUDI

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் சாலைகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, பொதுமக்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் - கோப்புப் படம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செல்லும் அனைத்து சாலைகளும் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் இன்றும், நாளையும் (டிசம்பர் 15) வெளியூர்களிலிருந்து பொதுமக்கள் வருவதைத் தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒருசில பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தரப்பிலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

அதில், "தூத்துக்குடி தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான மகிலாபுரம் - கீழசெக்காரக்குடிக்கு செல்லும் சாலை மற்றும் சொக்கலிங்கபுரம் - கீழசெக்காரக்குடிக்கு செல்லும் சாலையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்கு மாற்றாக பொட்டலூரணி வழியாக கீழச்சக்காரக்குடிக்கு செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் தத்தளித்து செல்லும் பேருந்து
மழை வெள்ளத்தில் தத்தளித்து செல்லும் பேருந்து (ETV Bharat Tamil Nadu)

அதேபோன்று, முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முறப்பநாடு ஆற்றுப்பாலம் வழியாக அகரம் கிராமப் பகுதிக்கு செல்லும் சாலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முறப்பநாடு ஆற்றுப்பாலம், வல்லநாடு வழியாக அகரம் கிராமப் பகுதிக்குச் செல்லலாம்.

ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முக்காணி, ஏரல், பெருங்குளம், சிவகளை, பேட்மாநகரம், ஆயத்துறை, ஆழ்வார்திருநகரி வழியாக திருச்செந்தூர் செல்லலாம்.

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்துங்கநல்லூர் - திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள புளியங்குளம் சந்திப்பு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த சாலைக்கு பதிலாக செய்துங்கநல்லூர், கொங்கராயன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லலாம்.

அதேபோல, செய்துங்கநல்லூர் கருங்குளம் - சேரகுளம் சாலைக்கு பதிலாக கருங்குளம், செய்துங்கநல்லூர், அய்யனார்குளம், தாதன்குளம் வழியாக சேரகுளம் செல்லலாம். செய்துங்கநல்லூர் மற்றும் சேரகுளம் பகுதிகளான தாதன்குளம் - கிழாகுளம் சப்வே பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக தாதன்குளம், தெற்குகாரசேரி, வாழகுளம் வழியாக கிழாகுளம் செல்லலாம்.

வெள்ள நீரில் மூழ்கிய சாலை
வெள்ள நீரில் மூழ்கிய சாலை (ETV Bharat Tamil Nadu)

கோவில்பட்டி - இளையரசனேந்தல் சப்வே பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கோவில்பட்டி, கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம், இனாமணியாச்சி ஜங்ஷன், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் வழியாக இளையரசனேந்தல் செல்லலாம்.

நாலாட்டின்புதூர் துரைசாமிபுரம் - விஜயாபுரி சாலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாண்டவர்மங்கலம் வழியாக துரைசாமிபுரத்திற்கும், கோவில்பட்டி, தெற்கு திட்டங்குளம் வழியாக விஜயாபுரிக்கும் செல்லலாம். கொப்பம்பட்டி பகுதியில் கசவன்குன்று - தெற்கு செம்புதூர் சாலையில் மழை வெள்ளம் பாய்வதால் எட்டயபுரம், ஈராட்சி வழியாக கசவன்குன்றுக்கும், தெற்கு செமபுதூர் பகுதிக்கு காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி வழியாகவும் செல்லலாம்.

இதையும் படிங்க: மிரட்டிய கனமழை; நெல்லையின் தற்போதைய நிலை..!

சிவந்திபட்டி - தீத்தாம்பட்டி பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் காமநாயக்கன்பட்டி, இலந்தைப்பட்டி வழியாக தீத்தாம்பட்டிக்கு செல்லலாம். விளாத்திகுளம் மந்திகுளம் ஜங்ஷன் - மந்திகுளம் கிராமத்திற்கு செல்லும் பாலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கொட்டநத்தம் வழியாக மந்திகுளம் கிராமத்திற்கு செல்லலாம்.

சங்கரலிங்கபுரம் பகுதியில் புதுப்பட்டி செல்லும் வழியில் வடபட்டி பாலத்தில் தண்ணீர் செல்வதால் புதுப்பட்டி, வாவலோத்தி, ரகுராமபுரம், கீழக்கரந்தை, அயன் வடமலாபுரம், அச்சங்குளம் வழியாக வேடப்பட்டி செல்லலாம்.

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம்
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளம் (ETV Bharat Tamil Nadu)
சரங்கரலிங்கபுரம் மற்றும் காடல்குடி பகுதியில் நாகலாபுரம், கே.துரைசாமிபுரம் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாகலாபுரம், சங்கரலிங்கபுரம், ஸ்ரீ ரங்காபுரம், நூதலக்கரை, கோவில்குமாரரெட்டியாபுரம் வழியாக கே.துரைசாமிபுரத்திற்கு செல்லலாம்.

அதேபோல, ஆதனூர் - மிளகுநத்தம் சப்வே பாலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் எப்போதும்வென்றான், சிவஞானபுரம், பொம்மையாபுரம் வழியாக மிளகுநத்தம் செல்லலாம். மேலும், கொல்லம்பரும்பு - முள்ளூர் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் குளத்தூர், வீரபாண்டியபுரம் வழியாக முள்ளூர் செல்லலாம்.

மேற்படி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையால் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றங்களை, பொதுமக்கள் பயன்படுத்தி மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.