சென்னை: தமிழ்நாட்டில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு ஜூலை 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தி வருவோருக்கு முன்பு ஒரு யூனிட்டுக்கு 4.60 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த மின்கட்டணம் இனி 4.80 ரூபாயாக பெறப்படும். அதிகபட்சமாக 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 11.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 11.80 ரூபாய் வசூலிக்கப்படும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்பமை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தாமாகவே முன் வந்து வழங்கிய, கட்டண திருத்த ஆணை எண்.6 15.7.2024 படி, 2024 ஆண்டிற்கான மின்சார கட்டண திருத்தம், 1.7.2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) July 15, 2024
In accordance with Hon'ble TNERC ,Multi year Tariff Regulations, the Hon'ble Tnerc has… pic.twitter.com/ySzyRDVX7E
ஐம்பது யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் 9 ரூபாய் 70 காசுகளில் இருந்து 10 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது. புதிய மின் இணைப்பு பெறுவோருக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை மற்றும் குறு நிறுவன மின்கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசு கல்வி நிறுவனம், மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் 7 ரூபாய் 15 காசுகளில் இருந்து 7 ரூபாய் 50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோர்களில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தமிள்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
#ElectricityTarrifRevision2024
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) July 15, 2024
Free Electricity to be continued for
domestic services upto 100 units and hut Service connections#மின்சாரகட்டணதிருத்தம்2024
இலவச மின்சாரம்...
வீடுகளுக்கான 100 யூனிட்கள் வரை
மற்றும் குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் தொடரும்....#FreeElectricity… pic.twitter.com/8WqpobCekh
இலவச மின்சாரம் தொடருமா?: அதேசமயம், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் உயர்கிறது! ஆணையம் அதிரடி அறிவிப்பு - tn electricity tariff hike