ETV Bharat / state

“ஏர் கூலர் வசதியுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்” - சிசிடிவி செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்! - Nilgiri Collector about cctv issue - NILGIRI COLLECTOR ABOUT CCTV ISSUE

Nilgiri Collector about cctv issue: கேமராக்கள் செயலிழந்து 20 நிமிடத்தில், தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் அதனை சரி செய்து, தற்போது கேமரா உள்ள பகுதியில் ஏர்கூலர்கள் அமைக்கப்பட்டு, சீராக இயங்கி வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா விளக்கமளித்துள்ளார்.

சிசிடிவி செயலிழப்பு குறித்து நீலகிரி ஆட்சியர் விளக்கம்
அதிக வெப்பம் காரணமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடி கேமராக்கள் செயலிழந்தது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 10:00 PM IST

Updated : Apr 28, 2024, 10:31 PM IST

ஏர் கூலர் வசதியுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நீலகிரி: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா இன்று (ஏப்.28) தெரிவித்துள்ளார்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த தேர்தலில் பயன்படுத்திய வாக்கு இயந்திரங்கள், உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இவை துணை ராணுவப் படை, சிறப்பு ஆயுதப்படையினர், துப்பாக்கி ஏந்திய உள்ளூர் காவலர்கள் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

173 கண்காணிப்பு கேமரா மூலம் வாக்கு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை கேமராக்கள் செயலிழந்தது. தொழில்நுட்ப பிரச்னை உடனடியாக சரி செய்யப்பட்டு, தற்போது கேமராக்கள் முறையாக இயங்கி வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான மு.அருணா, உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு பாலிடெக்னிக் வளகத்திற்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைகளில் வெப்பம் காரணமாக நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 173 கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தது. 20 நிமிடத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதனை சரி செய்து, தற்போது கேமரா உள்ள பகுதியில் ஏர்கூலர்கள் அமைக்கப்பட்டு, சீராக இயங்கி வருகிறது.

இந்தியத் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களோ, வேட்பாளர்களின் ஒரு பிரதிநிதியோ வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள அறையைப் (Strong room) பார்வையிட அனுமதி வழங்கப்படும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தேர்தல் அலுவலரால் தினந்தோறும் முற்பகல் மற்றும் பிற்பகல் நேரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தினந்தோறும் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது முதல் உள் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மூன்றாம் அடுக்கில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் ஆயுதப்படையினரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். 182 காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: "குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும்" - பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தல்! - Prince Gajendrababu

Last Updated : Apr 28, 2024, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.