நீலகிரி:நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீலகிரி சிவில் இன்ஜினியர் சங்கம் சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மாவட்ட ஆட்சியர் வளாகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அனைத்துக் குடியிருப்பு கட்டிட வரைபடங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும், நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் குழுவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட குறைந்தது 2 பொறியாளர்களையாவது நீலகிரி மாவட்ட கட்டிடத் திட்டக் குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளதைப் போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள கட்டிடங்களின் அதிகபட்ச உயரம் தற்பொழுது உள்ள 7 மீட்டார்களில் இருந்து 10 மீட்டராக உயர்த்தப்படக் கொள்கை திருத்தம் செய்யப்பட வேண்டும், உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: நீலகிரி சோலடாமட்டம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு!