ETV Bharat / state

பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு: மயிலாடுதுறையில் என்ஐஏ சோதனை! - NIA Raid in mayiladuthurai - NIA RAID IN MAYILADUTHURAI

NIA Raid in mayiladuthurai: மயிலாடுதுறையில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாகத் தடைசெய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

என்ஐஏ சோதனை
என்ஐஏ சோதனை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 1:21 PM IST

மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் அப்பகுதியில் நடைபெற்று வந்த மத மாற்றத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

இதனையடுத்து தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே வடகரை மில்லத்தூர் பகுதியில் வசிக்கும் தடைசெய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மாவட்டச் செயலாளர் நவாஸ்கான் மற்றும் குத்தாலம் அருகே தேரழந்தூர் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் வசிக்கும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல் (37) ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

அதிகாலை முதல் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். என்ஐஏ டிஎஸ்பி சுசிலா தலைமையில் வடகரை நவாஸ்கான் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. தற்போது நவாஸ்கான் ஒரு மாதத்திற்கு முன் சிங்கப்பூர் சென்றது குறிப்பிடத்தக்கது.

வடகரை மில்லத்தூர் முன்னாள் மாவட்டச் செயலாளர் நவாஸ்கான் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை காலை 8 மணிக்கு முடிவடைந்து டிஎஸ்பி சுசீலா உள்ளிட்ட என்ஐஏ அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். சோதனையில் ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேரிழந்தூரில் வசிக்கும் ஹமாருதீன் வீட்டில் சோதனையானது நடைபெற்று வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த நபர் மீது தீ வைப்பு.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் கொலைக்கான பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.