திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது (35). இவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பில் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீடு ஏர்வாடி முகைதி நகரில் உள்ள ரிஜெக்ட் தெருவில் உள்ளது.
இந்நிலையில் இன்று (பிப்.10) காலை சுமார் 5.45 மணி முதல் தேசிய புலனாய்வு முகமையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பரத் நாயக் தலைமையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினர் பக்ருதீன் அலி அகமது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளர் பொன்ராஜ் மற்றும் நெல்லை பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல அலுவலர் நிதின் ஆகியோரும் உடன் உள்ளனர். எனவே, வங்கியின் மூலம் ஹவாலா பணம் பரிமாற்றம் எதுவும் நடந்ததா? என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோவை, நெல்லை மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை..!