ETV Bharat / state

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி..! மேலும் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! - தேசிய புலனாய்வு முகமை

LTTE: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு உயிர்ப்பிக்க முயன்றதாக இந்தியாவிலும், இலங்கையிலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் 14வது நபர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

NIA files charge sheet against one more person for conspiring to revive LTTE
விடுதலை புலிகள் அமைப்பை உயிர்பிக்க சதி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 3:22 PM IST

சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக இந்தியா மற்றும் இலங்கையில் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில், இதுவரை 13 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது 14வதாக ஆதிலிங்கம் என்பவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகத் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் வர்த்தகம் மூலமாகத் தடைசெய்யப்பட்ட அமைப்பை உயிர்ப்பிக்கும் சதியில் ஈடுபட்டதாக ஆதிலிங்கம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க, போதைப்பொருள் மற்றும் ஆயுதம் விற்பனை மூலமாகக் கிடைத்த ஹவாலா பணத்தை வசூல் செய்யும் ஏஜெண்டாக ஆதிலிங்கம் செயல்பட்டார்.

சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், இந்த சதியில் ஆதிலிங்கத்தின் பங்கு குறித்து முகமை விரிவாகக் கூறியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் தமிழ் திரைப்படத்துறையில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தபோது இலங்கையைச் சேர்ந்த குணசேகரன், திலீபன் ஆகிய விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முக்கிய நபராகச் செயல்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாகவும், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகவும் 13 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இதேபோல், இந்திய விசாரணை அமைப்புகளால் 2021ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட ஒரு சரக்கு கப்பலிலிருந்து 300 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின், 5 ஏ.கே.47 ரகத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து, தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு; மார்ச் 16-இல் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.