ETV Bharat / state

தேனி அருகே காதல் கணவன் தலைமறைவு! மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை! - Newly married girl suicide - NEWLY MARRIED GIRL SUICIDE

Newly married girl suicide: தேனி அருகே காதல் கணவன் தலைமறைவானதால் மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

GIRL SUICIDE
GIRL SUICIDE
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 3:49 PM IST

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலச்சிந்தலைசேரி கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் என்பவரின் மகள் ஹேமலதா (19). ஜோதிடர் சுரேஷ் தனது உறவினரான போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பவரின் வீட்டிற்கு குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இவர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர் ஆவார். இவருக்கு சந்துரு(20) என்ற மகன் உள்ளார். மணிவாசகம் வீட்டிற்குக் குடுப்பத்துடன் சென்று வந்து கொண்டு இருக்கும் வேளையில் ஹேமலதாவிற்கும் சந்துருவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

அது நாளடைவில் தீவிரமடையவே தாங்களாகவே திருமணம் செய்து கொள்ளாம் என முடிவு செய்து இருவரும் கடந்த ஆண்டு ஏப்.16ஆம் தேதி சின்னமனூர் அருகே உள்ள சிவகாமி அம்மன் கோயிலில் பதிவு செய்யாமல் திருமணம் செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அவர்களது தாத்தா சேதுராமனின் வீட்டில் சில நாட்கள் தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில், காதலர்கள் கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து, இருவர்களின் பெற்றோர்களை அழைத்த போலீசார் மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடையாத காரணத்தால் இருவரையும் பெற்றோருடன் அனுப்பி வைப்பது என்றும், மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவுடன் முறைப்படி திருமணம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி இருவரை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சந்துருவின் பெற்றோர்கள் அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாகக் கோம்பை காவல் நிலையத்தில் ஹேமலதா புகார் செய்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சந்துருவைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில், கடந்த சில நாள்களாகவே கணவன் காணாமல் போனதைத் தொடர்ந்து மன உளைச்சலிலிருந்து வந்த ஹேமலதா போடி அருகே உள்ள சிந்தலைச்சேரியில் உள்ள தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காதலித்து திருமணம் முடித்து தனது மகளுடன் குடும்பம் நடத்திவிட்டுத் தலைமறைவான சந்துருவைக் கூட்டிச்சென்று பெங்களூரில் மறைத்து வைத்துள்ள அவரது தந்தை தாய் உள்ளிட்ட குடும்பத்தினரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் கூறி ஹேமலதா உறவினர்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்கொலை தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.360 விலை உயர்வு! - Today Gold And Silver Rate

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.