ETV Bharat / state

சேலம் மாமாங்கத்தில் ரூ.29 கோடி மதிப்பில் புதிய மேம்பாலப் பணிகள் துவக்கம்! - Mamangam New flyover bridge

Mamangam New flyover bridge: சேலம் மாமாங்கத்தில் ரூ.29 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படிகிறது.

மேம்பாலப் பணிகள்
மேம்பாலப் பணிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 1:23 PM IST

சேலம்: மாமாங்கம் பகுதியில் உள்ள சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் புதிய பேருந்து நிலையம், கொண்டலாம்பட்டி, ஆத்தூர், சென்னை, ஓமலூர், மேட்டூர், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளுக்கும், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உயர் ரக தனியார் நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள், சொகுசு கார் விற்பனை நிலையங்கள் என வணிகம் அதிகம் நடக்கக்கூடிய முக்கிய இடமாகவும் இந்த மாமாங்கம் பகுதி திகழ்ந்து வருகிறது.

இதேபோல, ரெட்டிபட்டியில் இருந்து ஜங்ஷன், தாரமங்கலம், இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், சேலம் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் மையமாகவும் மாமாங்கம் உள்ளது. மேலும், அனைவருக்கும் இணைப்பு சாலையாக இந்த தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் எப்போதும் மாமாங்கம் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவே காணப்படும்.

மேலும், கோயமுத்தூர் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்தும் வடமாநிலங்களுக்கு வாகனங்கள் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையாகவும் இந்த சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், வெளி மாநில கனரக வாகனங்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் கடக்கும் பகுதியாக மாமாங்கம் உள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், வாகனங்கள் வேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படும் பகுதியாகவும் மாறிவிட்டது எனலாம். அதனால், இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகில் இருந்து ரேடிசன் ஹோட்டல் வரை நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழியாக அதிகமாக கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், "மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பாலம் வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகில் தொடங்கி ரேடிசன் ஹோட்டல் வரை 700 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட உள்ளது. மேலும் இப்பாலத்தின் பணிகள் ஆறு மாதம் முதல் ஓராண்டிற்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் 442-வது திருவிழா.. அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.