ETV Bharat / state

2026 சட்டமன்ற தேர்தல்: 37 கடலோர தொகுதிகளிலும் மீனவர்கள் வேட்பாளராக நிறுத்த முடிவு! - fishermen as candidates

Neithal makkal katchi Bharathi: 2026 சட்டமன்ற தேர்தலில் 37 கடலோர தொகுதிகளிலும் மீனவர்களையே வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம். எனவே, வாக்காளர்களாக இருந்த மீனவர்கள் இனி வேட்பாளராக மாற போகின்றனர் என்று நெய்தல் மக்கள் கட்சியின் தலைவர் பாரதி தெரிவித்துள்ளார்.

நெய்தல் மக்கள் கட்சியின் தலைவர் பாரதி
நெய்தல் மக்கள் கட்சியின் தலைவர் பாரதி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 10:02 PM IST

சென்னை: கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) மற்றும் மீனவர்களுக்கு அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஒட்டுமொத்த மீனவர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து நெய்தல் மக்கள் கட்சி தலைவர் பாரதி, ஈடிவி பாரத்திடம் கூறியதாவது, “கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பு ஆணை (CRZ -Costal regulation zone) 1991-ல் உருவாக்கப்பட்டது. இது கடற்கரையில் கொண்டு வரப்படும் பல்வேறு திட்டங்களாகும்.

நெய்தல் மக்கள் கட்சியின் தலைவர் பாரதி பிரத்யேக பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம்(Costal zone management plan) 1996 கொண்டுவரப்பட்டது. 2011-ல் இந்த கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மீனவ மக்களுக்கு முரணான திட்டங்களை கொண்டிருந்தது. அதை திருத்தம் செய்து 2019-ல் கடலோர ஒழுங்குமுறை மண்டலம், 12 கடலோர மாவட்டங்களில் கருத்து கேட்டு புதிய திட்டங்களை வகுத்தனர்.

பாரம்பரியமாக இருக்கக்கூடிய மீனவ கிராமங்கள், கடற்கரை மண்டல மேலாண்மை வரைபடத்தில் இருக்க வேண்டும். மேலும், பொதுவாக இருக்க கூடிய இடங்கள், மீன் பிடிக்கும் இடங்கள் ஆகியவற்றை அடையாளபடுத்த வேண்டும். ஆனால், அந்த வரைபடத்தில் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 608 மீனவ கிராமங்கள் உள்ளன.

ஆனால், இந்த வரைபடத்தில் 50க்கும் குறைவான கிராமங்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. மற்ற கிராமங்களின் பெயர்கள் வரைபடத்தில் இல்லை. வெறும் வெற்றி வரைபடமாக உள்ளது. இது குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீனவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் CRZ 2019 விதிகளின் படி,வரைபடம் வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

கோரிக்கைகள்: கடற்கரை மண்டல மேலாண்மை வரைபடத்தில், மீனவர்களின் வாழ்விடங்கள் இருக்க வேண்டும். தேவைகளை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் வரைபடத்தை வெளியிட வேண்டும். முக்கியமாக CRZ - 2019 திட்டத்தில் இருக்கும் அம்சங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். மீனவர்களுக்கு நில உரிமை அளிக்கும் வகையில் இலவச நில பட்டா எங்கள் வாழ்விடத்தில் அளிக்க வேண்டும்.

போராட்டம் அறிவிப்பு: வரைபடம் தவறான முறையில் CRZ -2019 திட்டங்களின் அடிப்படையில் வெளிவரவில்லை என்றால், தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். வருகிற 26 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

தமிழ்நாடு அரசு மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டை மாறி மாறி சில கட்சிகள் ஆட்சி செய்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 37 கடலோர சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அடுத்த சட்டமன்ற தேர்தலில் 37 கடலோர தொகுதிகளிலும் மீனவர்களையே வேட்பாளராக நிறுத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம். இத்தனை நாள் மீனவர்கள் வாக்காளர்களாக இருந்தனர். இனிமேல் வேட்பாளராக மாற போகிறார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: கல்யாணி ராணி சத்யா புதுச்சேரியில் கைது.. 12 ஆண்களை ஏமாற்றி பணம் பறித்தது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.