ETV Bharat / state

தஞ்சை பீச்சோரம் கிடந்த பை.. அதிர்ந்த போலீசார்.. ரூ.2 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்! - METHAMPHETAMINE SEIZED IN THANJAVUR

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை பொருளை கைப்பற்றிய போலீசார்
போதை பொருளை கைப்பற்றிய போலீசார் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 10:10 AM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில், பாலித்தீன் பையில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பதாக கடலோரக் காவல் குழு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், பட்டுக்கோட்டை கடலோர காவல் குழுமம் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப் இன்ஸ்பெக்டர்கள் பிச்சை வேம்பு, ராஜசேகர், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் கடற்கரை பகுதிக்குச் சென்று பார்சலைக் கைப்பற்றினர்.

அதை போலீசார் மற்றும் அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது, அது போதைப் பொருள் என்பது தெரிய வந்தது. எந்த வகையான போதைப் பொருள் என்பதை அறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில், பார்சலில் இருந்தது மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் என்பது தெரிய வந்தது. சுமார் 950 கிராம் எடை இருந்த அந்த போதைப் பொருளின் மதிப்பு ரூபாய் 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அதிராம்பட்டினம் கடலோரக் காவல் குழும போலீசார் வழக்குப் பதிவு செய்து, போதைப் பொருளை கடற்கரையில் பதுக்கி வைத்தது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? யார் கடத்தி வந்தார்கள், இலங்கையிலிருந்து படகு மூலம் போதைப் பொருளைக் கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்தனரா, எங்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மதுரையில் இருந்து மெமு ரயில் சேவை.. எப்போது துவக்கம்?

சமீபத்தில், சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 6.92 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அண்மையில், போதைப் பொருள் தயாரித்து விற்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கணக்குப் போட்டு, வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்த கல்லூரி மாணவர்கள் உட்பட ஏழு பேரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டினம் அருகே கடற்கரை பகுதியில் விலை மதிப்பு மிக்க போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.