திருச்சி: திருச்சி மாவட்டம் தென் பகுதிகளுக்கு செல்ல முக்கிய மாவட்டமாக இருப்பதால், திருச்சி ரயில்வே கோட்டம் முக்கியமான ரயில் நிலையமாக இருந்து வருகிறது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை போன்ற பல்வேறு இடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் டாக்டர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத்நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் வழக்கம் போல் பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர்.
இச்சோதனையின் போது இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் (26) என்பவர் மாஸ்க் அணிந்து சற்று வித்தியாசமாக நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், லட்சுமனணின் பையை சோதனை செய்தனர்.
அதில் 1 கோடியே 89 லட்சத்து 622 ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 795.90 கிராம் தங்கம் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து, வணிகவரித்துறை அதிகாரிகள் ரயில் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. அந்த ஆவணங்கள் போலியானவை என தெரிய வந்ததால் லட்சுமணனை கைது செய்து, கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடு கட்டுமானத்தின் போது கிடைத்த சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தல் - 3 பேர் கைது!