கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவர், இதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை விஜயகுமார் தனது தோட்டத்திற்குச் சென்று விட்டு மீண்டும் பிற்பகலில் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, விஜயகுமார் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் காணாமல் போன காரில் கஞ்சா கடத்தல்.. பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கிய 3 பேரின் பின்னணி என்ன? - Ganja Smuggling In A Missing Car