சென்னை: எம்டி, எம்எஸ் ஆகிய முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு வரும் ஆக 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் டெலிகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் NEET-PG LEAKED MATERIAL என்ற பெயரில் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக ஸ்கிரீன் ஷாட்கள் பகிரப்பட்டு வைரலாகி வந்தன. மேலும், வினாத்தாள்கள் ரூ.70,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறுப்பு தெரிவித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சமூக வலைத்தளங்களின் மூலம் சில தவறான கருத்துக்கள் பரப்புவது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. சிலர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வரவிருக்கும் நீட் தேர்வின் வினாத்தாள்களை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மோசடிக்கு எதிராக நாங்கள் போலீசில் புகார் அளித்துள்ளோம். மேலும், முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் NEET-PG LEAKED MATERIAL என்ற சேனல் போலியானது. இதனை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறுக்கிறது.
மேலும், வரவிருக்கும் நீட் தேர்வுக்கான கேள்வி வினாத்தாள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. சமூக வலைத் தளங்களில் பரவும் இந்த வினாத்தாள்கள் போலியானவை என்று உறுதியளிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் யாரேனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவது, உண்மைகளை சரிபார்க்காமல் வதந்திகளை வெளியிடுவது அல்லது பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
#MythvsFacts
— Ministry of Health (@MoHFW_INDIA) August 7, 2024
Media reports claiming potential leakage of NEET-PG 2024 Examination Paper are false and misleading
NBEMS has registered a police complaint against fraudsters and their accomplices for attempts to befool NEET-PG aspirants in the name of providing questions of…
மேலும், முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் தொடர்பாக யாரேனும் உங்களை அனுகினால், உடனடியாக https://exam.natboard.edu.in/communication.php?page=main என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும் அல்லது அல்லது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. பின்னர், இதன் தேர்வு முடிவுகள் வெளியானது. அப்போது, வினாத்தாள் கசிவு, வினாக்களில் குளறுபடி, தேசிய தேர்வு முகமையால் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட விவகாரங்கள் பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நீட் தேர்வு மைய விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி: தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையம் ஒதுக்கீடு! - PG Neet Exam center issue