ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் கறார் காட்டிய குஷ்பூ.. 'மெத்தனால் இருந்த ஆதாரம் எங்கே'.. கேள்விகளை அடுக்கிய கமிஷன்! - kushboo

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 5:07 PM IST

Updated : Jun 26, 2024, 7:49 PM IST

kushboo committee: 250 லிட்டர் மெத்தனால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக கூறும் சிபிசிஐடி போலீசார், அதற்கான ஆதாரத்தை தர முடியுமா என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ (credit - Etv Bharat Tamil Nadu)

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் இருப்பிடத்துக்கான பொறுப்பை அரசு ஏற்றுள்ளது.

அத்துடன், இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு, மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுவிலக்கை கவனித்து வந்த ஏ.டி.ஜி.பி. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்களும் உயிரிழந்துள்ளதால் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பூ தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று நேரில் சென்று விசாரித்தது. அப்போது, அங்குள்ள பெண்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எதனால் குடித்தீர்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பூ கூறுகையில், ''கள்ளச்சாராயம் பெண்களுக்கு எளிதாக கிடைக்கிறது. ஆனால், இதை தடுக்க வேண்டும் என்று பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஏன் தெரியவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், பெண்கள் குடிப்பதற்காக சொல்லும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 250 லிட்டர் மெத்தனால் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக கூறும் சிபிசிஐடி போலீசாரிடம், அதற்கான ஆதாரம் எங்கு உள்ளது? நீதிபதி முன்பு அதை அழித்தார்களா? ஆதாரத்தை கொடுக்கச் சொல்லுங்கள் என ஆவேசமாக கேட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "சாராய வியாபாரம் என்பது கேன்சர் மாதிரி.. அடி வேரோடு பிடுங்கி எடுத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். ஆனால், அப்படி செய்யவில்லை. வியாபாரமாக மட்டும் பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் குஷ்பூ ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதையும் படிங்க: போதைக்கு முற்றுப்புள்ளி.. அதுதான் எல்லாத்துக்கும் தீர்வு.. கண்ணீருடன் கூறும் கள்ளக்குறிச்சி பெண்கள்.!

Last Updated : Jun 26, 2024, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.