ETV Bharat / state

மாஞ்சோலை விவகாரம்; நெல்லையில் 4 நாட்கள் முகாமிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள்! - Manjolai Estate Case

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக நான்கு நாட்கள் நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்த உள்ளோம் என்றும் மற்றும் பிபிடிசி நிறுவனத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி ரவி சிங் தெரிவித்துள்ளார்.

NHRC அதிகாரிகள் ரவி சிங் மற்றும் யோகேந்திர குமார் திருபாதி, தேயிலைத் தோட்ட தொழிலாளி
NHRC அதிகாரிகள் ரவி சிங் மற்றும் யோகேந்திர குமார் திருபாதி, தேயிலைத் தோட்ட தொழிலாளி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 5:47 PM IST

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து தேயிலைத் தோட்ட நிறுவனமான பிபிடிசி நிர்வாகம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாங்கி மாஞ்சோலை, நாலு மூக்கு, ஊத்து காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டம் அமைத்தது.

இந்த நிலையில், குத்தகை காலம் விரைவில் முடிவடைய இருப்பதால், தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிறுவனம் முன்கூட்டியே விருப்ப ஓய்வு கொடுத்துள்ளது. இதனால், மாஞ்சோலை, நாலு மூக்கு, ஊத்து காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாது, கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் மாஞ்சோலையை விட்டுப் பிரிய மனமில்லாமல் தமிழக அரசே தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் அல்லது தொடர்ந்து அங்கு வசிக்க நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், குத்தகை காலத்திற்கு பிறகு அந்த இடம் அனைத்தும் காப்புக்காடாக மாற்றப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழக அரசு அதை ஏற்று நடத்துவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் எப்படியாவது மாஞ்சோலையில் தான் வசிக்க வேண்டும் என தொழிலாளர்கள் உறுதியோடு கடந்த சில மாதங்களாகப் போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: AI தொழில்நுட்ப காலத்திலும் இந்த கொடுமையா? துப்புரவு பணியாளருக்கு கோயம்பேட்டில் நேர்ந்த அவலம்

இதற்கிடையே, மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தற்போது தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி ரவி சிங் மற்றும் யோகேந்திர குமார் திருபாதி ஆகியோர் நெல்லை வந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியிடம் நேரில் விசாரணை நடத்தி அவரிடம் உள்ள ஆவணங்களை பெற்றுகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி ரவி சிங், "மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் விசாரணை அதிகாரியாக நாங்கள் நியமிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விசாரணை நடத்த உள்ளோம்.

மேலும், மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் உள்ள தகவல்களையும் ஆவணங்களையும் எங்களிடம் தரலாம். மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து மாஞ்சோலை விவகாரம் தொடர்பான ஆவணங்களை பெறப்பட்டதோடு, அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும் எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாது, புகார்தாரரான கிருஷ்ணசாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டு அவரிடம் உள்ள ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது. நேரடியாக மாஞ்சோலை சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அங்கு உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. மற்றும் பிபிடிசி நிறுவனத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.