சென்னை: அமராவதி துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு கட்டி வரும் தடுப்பணை கட்டுமானம் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, காவிரி தீர்ப்பாயத்தால் கேரள அரசுக்கு ஒதுக்கப்பட்ட பங்கான 3 TMC-க்குள் வரும் நீரைத்தான் சிலந்தியாற்றில் கலுங்கு (weir) கட்டி எடுக்கிறோம் என கேரள அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசுத் தரப்பில், தடுப்பணை கட்டும் விவரத்தையே தமிழ்நாடு அரசுக்கு கேரளா தெரிவிக்கவில்லை. 3 TMC நீரைத்தான் எடுப்பார்கள் என்பதை எப்படி நம்புவது? எப்படி நீரை அளவிடுவது? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து, சிலந்தியாற்றில் தடுப்பணை கட்ட காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி கேரள அரசு முன் அனுமதி பெற்றுள்ளதா? பாம்பாறு துணைப்படுகையில் கேரள அரசு இதுவரை கட்டியுள்ள மற்றும் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள தடுப்பணைகளின் விவரங்கள் குறித்தும் விரிவான அறிக்கை அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; நாகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற போலீசார்!