ETV Bharat / state

“சபாநாயகரே சொல்லிட்டாரு..” நாங்குநேரிக்கு செல்ல மறுத்த பேருந்து ஓட்டுநரின் வைரல் வீடியோ! - Nanguneri Government bus issue - NANGUNERI GOVERNMENT BUS ISSUE

Nanguneri Government bus: நாங்குநேரிக்கு அரசுப் பேருந்து செல்ல வேண்டாம் என சபாநாயகர் கூறியதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பேருந்து ஓட்டுநர் புகைப்படம்
பேருந்து ஓட்டுநர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 7:30 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்குள் அரசுப் பேருந்துகள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

நாங்குநேரி ஓட்டுநர் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரி ஒரு சட்டமன்றத் தொகுதி மற்றும் தாலுகாவின் தலைநகராக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், காவல் நிலையம், மருத்துவமனை என பல்வேறு சேவைகளுக்கு நாங்குநேரி வட்டாரம் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அரசுப் பேருந்துகள் வழியில் உள்ள முக்கிய பகுதிகளான நாங்குநேரிக்குள் செல்லாமல், பல நேரங்களில் புறவழிச் சலையில் பயணிகளை
இறக்கி விட்டுச் செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. அனைத்து பேருந்துகளும் நாங்குநேரிக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி வர வேண்டும் என அரசு உத்தரவு இருந்தும், அதனை செயல்படுத்தாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, இது குறித்து பெற்ற சிறப்பு உத்தரவு இருந்தும், அதனை மதிக்காத அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும், ஊழியர்களும் சட்ட விரோதமாக அரசுப் பேருந்துகளை புறவழிச் சாலையில் இயக்கி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளும், எம்எல்ஏ, எம்பிக்களும் வேடிக்கை பார்ப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஜூன்5) இரவு நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து, நாகர்கோவில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நாங்குநேரி செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்துள்ளார். அப்பொழுது அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பயணி ஒருவர், நாங்குநேரிக்கு போகாதது குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் கேட்ட நிலையில், “சபாநாயகர் அப்பாவு மற்றும் வள்ளியூர் வணிகர் சங்கம் இணைந்து முடிவெடுத்து நாங்குநேரிக்கு அரசுப் பேருந்து செல்ல வேண்டாம்” என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக, நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்ததால், காவலருக்கும், பேருந்து நடத்துநருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ வைரலான நிலையில், உயர் அதிகாரிகளின் தலையீட்டால் காவல்துறையினர், போக்குவரத்து துறையினரோடு சமாதானமாகினர். மேலும், கடந்த மே 19ஆம் தேதி இதே பேருந்தின் நடத்துநர், வள்ளியூர் போக மாட்டேன் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தருமபுரி மக்களவை தொகுதி: வாக்கு வங்கியை தக்க வைத்த பாமக! - கோட்டையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக! - DHARMAPURI ELECTION RESULTS 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.