ETV Bharat / state

அதிமுக, பாஜகவை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர்.. தொகுதி வாரியாக வாக்கு விபரம்.. மாநில கட்சி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு! - Naam Tamilar vote sharing

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 12:26 PM IST

Tamil Nadu lok sabha election Results 2024: 18வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக 40 தொகுதிகளில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெறும் நிலைக்கு வளர்ந்துள்ளது. தொகுதி வாரியாக நாம் தமிழர் வேட்பாளர் பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு சதவீதம் குறித்து விரிவான அலசல்..

சீமான்
சீமான் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் கூட்டணி இன்றி 40 தொகுதிகளும் மைக் (Mike Symbol) சின்னத்தில் களம் கண்ட நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்று தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.

பாஜக, அதிமுகவை முந்திய நாம் தமிழர்: புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அதேபோல், கள்ளக்குறிச்சி தொகுதியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடம், திருச்சி தொகுதியில் அமமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளிக்கு மூன்றாவது இடம், நாகப்பட்டினம் தொகுதியில் நேரடியாக பாஜக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி 1,31,294 வாக்குகள் பெற்ற வேட்பாளர் கார்த்திகா என நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மக்களவைத் தொகுதிவாரியாக நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

வரிசை எண்தொகுதிவேட்பாளர்வாக்குகள்இடம்
1அரக்கோணம்ஆசிபா நஸ்ரின்98,944நான்காம் இடம்
2ஆரணி பாக்யலட்சுமி66,740நான்காம் இடம்
3மத்திய சென்னை கார்த்திகேயன்46,031நான்காம் இடம்
4வட சென்னை அமுதினி95,954நான்காம் இடம்
5தென் சென்னை தமிழ்ச்செல்வி 83,972நான்காம் இடம்
6சிதம்பரம்ஜான்சிராணி65,589நான்காம் இடம்
7கோயம்புத்தூர்கலாமணி ஜெகநாதன்82,657நான்காம் இடம்
8கடலூர்மணிவாசகன்57,424நான்காம் இடம்
9தருமபுரி அபிநயா65,381நான்காம் இடம்
10திண்டுக்கல்கலைராஜன்97,845நான்காம் இடம்
11ஈரோடுவிஜயகுமார்77,911நான்காம் இடம்
12கள்ளக்குறிச்சி ஜெகதீசன்73,652மூன்றாம் இடம்
13காஞ்சிபுரம்சந்தோஷ்குமார்1,10,272நான்காம் இடம்
14கன்னியாகுமரிமரியா ஜெனிபர்52,721மூன்றாம் இடம்
15கரூர்கருப்பையா57,203நான்காம் இடம்
16கிருஷ்ணகிரிவித்யா ராணி வீரப்பன்1,27,642 நான்காம் இடம்
17மதுரைசத்யாதேவி92,879நான்காம் இடம்
18மயிலாடுதுறைகாளியம்மாள்1,27,642நான்காம் இடம்
19நாகப்பட்டினம்கார்த்திகா1,31,294மூன்றாம் இடம்
20நாமக்கல் கனிமொழி95,577நான்காம் இடம்
21நீலகிரிஜெயக்குமார்58,821நான்காம் இடம்
22பெரம்பலூர்தேன்மொழி1,13,092நான்காம் இடம்
23பொள்ளாச்சிசுரேஷ்குமார்58,196நான்காம் இடம்
24ராமநாதபுரம்சந்திரபிரபா ஜெயபால்97,672நான்காம் இடம்
25சேலம்மனோஜ்குமார்76,207நான்காம் இடம்
26சிவகங்கைஎழிலரசி1,63,412நான்காம் இடம்
27ஸ்ரீபெரும்புதூர்ரவிச்சந்திரன்1,40,233நான்காம் இடம்
28தென்காசி மதிவாணன்1,30,335நான்காம் இடம்
29தஞ்சாவூர்ஹூமாயூர் கபீர்1,20,293நான்காம் இடம்
30தேனிமதன்76,834நான்காம் இடம்
31தூத்துக்குடிரொவினா ரூத் ஜேன்1,20,300நான்காம் இடம்
32திருச்சி ஜல்லிக்கட்டு ராஜேஷ்1,07,458மூன்றாம் இடம்
33திருநெல்வேலிசத்யா87,688நான்காம் இடம்
34திருப்பூர்சீதாலட்சுமி95,726நான்காம் இடம்
35திருவள்ளூர் ஜெகதீஷ் சந்தர்1,20,838நான்காம் இடம்
36திருவண்ணாமலை ரமேஷ்பாபு83,869நான்காம் இடம்
37வேலூர்மாதேஷ் ஆனந்த்53,284நான்காம் இடம்
38விழுப்புரம்களஞ்சியம்57,242நான்காம் இடம்
39விருதுநகர்கெளசிக்77,031நான்காம் இடம்
40புதுச்சேரிமேனகா39,603மூன்றாம் இடம்

நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகள்: 40 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 36 லட்சத்து 88 ஆயிரத்து 799 வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் எழிலரசி 1,63,412 வாக்குகளும் குறைந்தபட்சமாக புதுச்சேரியில் மேனாகா 39,603 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

புதிய சின்னத்தை மக்களிடத்தில் சேர்த்த சீமான்: வழக்கமாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கும் அந்த சின்னத்தை முறையாக பதிவு செய்யவில்லை என்ற காரணத்தால் முன்னுரிமை அடிப்படையில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஐக்கிய கட்சிக்கு வழங்கியதாக கூறியது தேர்தல் ஆணையம். இதனால் இந்த முறை புதிய சின்னமாக மைக்(ஒலிவாங்கி) சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பு வரை சின்னத்திற்காக நாம் தமிழர் கட்சி நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியது. ஆனாலும் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காததால் மைக் சின்னத்தில் களம் கண்டது. இறுதி நேரத்தில் சின்னத்தை மூலை முடுக்குகளில் கொண்டு சென்று சேர்ப்பதில் சற்று சிரமத்தையும் சந்தித்தது. கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் கூடுதல் ஓட்டுகள் கிடைத்திருக்கும் என கூறுகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.

மாநில கட்சி அங்கீகாரம்: தேர்தல் ஆணையம் 'Election Symbols (Reservation and Allocation) Order 1968' தேர்தல் சின்னங்கள்(ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. அந்த வகையில் மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 8 விழுக்காடு வாக்குகள் பெற வேண்டும் அந்த வகையில் இந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 37 லட்சம் வாக்குகளுடன் 8.19 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் மாநில கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பை நாம் தமிழர் பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி 6.58 விழுக்காடு வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயகாந்த் பாணியில் எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.