ETV Bharat / state

"உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?"- ஆளுநர் உரை குறித்து முரசொலி ரியாக்‌ஷன்! - RN Ravi

Tamil Nadu Governor: தமிழ்நாடு ஆளுநர் உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல் அளித்தார் என்றும் அவரால் ஒப்புதல் தரப்பட்ட உரையை அவரே வாசிக்க மறுக்கிறார் என்றும் முரசொலி விமர்சனம் வெளியிட்டு உள்ளது.

Tamil Nadu Governor
தமிழ்நாடு ஆளுநர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 9:31 AM IST

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது சட்டப்பேரவை மரபாக இருக்கிறது. இந்நிலையில் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இதற்கு தமிழக அரசின் உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது.

இந்நிலையில், முரசொலி நாளிதழில் ஆளுநர் உரை குறித்து செய்தி வெளியாகி உள்ளது. அதில், "உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்? அவரால் ஒப்புதல் தரப்பட்ட உரையை அவரே வாசிக்க மறுக்கிறார். இதில் உள்ளது தனக்கு உடன்பாடு இல்லாதது என்கிறார். உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல் தர வேண்டும், உடன்பாடு இல்லாத உரையை வாசிக்க மறுக்க எதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்ப வேண்டும். அதை ஆளுநர் மாளிகையில் இருந்தே சொல்லி அனுப்பி இருக்கலாமே.

மேலும், தான் ஒப்புதல் வழங்கிய உரையில், தவறு நிறைய இருக்கிறது என்று அவரே சொல்கிறார். என்ன தவறு என்பதைச் சொன்னாரா? இல்லை. தவறைக் கண்டுபிடித்து இருந்தால் தானே சொல்வார். அவைக்கு ஒவ்வாத கருத்துகளைப் பேசினால் அவை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். முதன்முதலாக ஆளுநர் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது அவர் வகிக்கும் பதவிக்குப் பெருமையல்ல, இழுக்கு ஆகும்.

திரும்பத் திரும்ப ஒரே தவறை அவர் செய்து கொண்டு இருக்கிறார். அவர் தனது பதவியில் இருந்து விலகி - கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறி - சைதாப்பேட்டையில் தனியாக வீடு எடுத்துத் தங்கி அரசியல் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு இத்தகைய அருவருப்பான செய்கைகளைச் செய்யக் கூடாது" என்று கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: JEE Main Exam Results: மாணவர்களிடையே அதிகரிக்கும் போட்டி- கல்வி ஆலோசகர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.