ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணி; கேரளா, தமிழ்நாடு அரசுகளுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்! - MULLAIPERIYAR DAM ISSUE

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரளா அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Credits - DMK and AIADMK X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 7:00 PM IST

தேனி : தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் டிசம்பர் 4-ஆம் தேதி பராமரிப்பு பணிகளை செய்வதற்காக தளவாடங்களை ஏற்றிச் சென்ற லாரியை கேரளா அரசு உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.

இதனைக் கண்டிக்கும் விதமாக, பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், இன்று சனிக்கிழமை (டிசம்பர் 7) இரு மாநில எல்லையான குமுளியை நோக்கி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் புறப்பட்டனர். அப்போது, கூடலூர் அருகே லோயர் கேம்ப்-ல் உள்ள பென்னி குயிக் மணிமண்டபம் முன்பாக காவல்துறையினர் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால், அப்பகுதியில் தரையில் படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய பெரியாறு - வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், "முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்து பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறது.

அணையை பலப்படுத்த விடாமல் ஆய்வு செய்வது எந்த வகையில் நியாயம்?. கேரளா அரசின் பிடிவாதத்தால் இரு மாநில உறவு சீர்குலையும் காலம் வந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்காக சென்ற தமிழ்நாட்டு வாகனங்களை அனுமதிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளா காவல்துறையினர் வெளியேற வேண்டும். இதைப்போக்கே கேரள அரசு கடை பிடித்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுத்தனர்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாய தேவைக்காகவும், பலமாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில், தமிழக நீர்வள ஆதாரத் துறை அலுவலர்கள் (பொதுப்பணித் துறை) ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது வழக்கம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் 2020-21 வரை, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கோள்ள கேரள வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகள் எந்தவிதமான இடையூறுமின்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆனால், திமுக ஆட்சியில், இந்த ஆண்டு வழக்கம்போல் முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கட்டுமானப் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பு இரு லாரிகளில் கொண்டு செல்லும் போது வல்லக்கடவு என்ற இடத்தில், கேரள வனத் துறை சோதனைச் சாவடியில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு சென்ற இரு லாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன என்று செய்திகள் வருகின்றன.

கேரள நீர்வளத் துறையிடம் (பொதுப்பணித் துறை) அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தங்களுக்கு இதுகுறித்து எந்த தகவலும் வராததால், அவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று நேற்றுவரை கேரள வனத் துறை, கட்டுமானப் பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை முல்லை பெரியாறு பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

இச்செய்தியை அறிந்த, முல்லைப் பெரியாறு அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்ட மக்களும் இன்றைக்கு கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம், லோயர் கேம்ப் பகுதியில் நேற்று (டிசம்பர் 6) மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதை, தமிழக காவல் துறை தடுத்து நிறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்குத் தேவையான அனுமதி பெறாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக அனைத்து விவசாய சங்கம் போராட்டம்:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் கேரள மாநிலம், குமுளியில் உள்ள இரு மாநில எல்லைகளை முற்றுகையிட முயன்ற போது, கூடலூர் அருகே லோயர் கேம்ப்-ல் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் குமுளி மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் வாகனங்களும் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லோயர் கேம்ப்-ல் உள்ள பென்னிகுயிக் மணி மண்டபத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.‌

சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, உத்தமபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலவன், உத்தமபாளையம் வட்டாட்சியர் சுந்தர்லால் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர் வல்லக்கடவு சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்ட தளவாடப் பொருட்களின் வாகனங்கள் முல்லைப் பெரியாறு அணைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயணி, பி.ஆர். பாண்டியனிடம் செல்போனில் பேசியதைடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தின் போது லோயர் கேம்ப்-ல் பென்னி குயிக் மணிமண்டபம் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.