ETV Bharat / state

நீலகிரியில் தொடர் கனமழை.. முதுமலை புலிகள் காப்பக சுற்றுலாத்தலங்கள் மூடல்! - Mudumalai Tiger Reserve - MUDUMALAI TIGER RESERVE

Mudumalai Tiger Reserve: நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mudumalai
முதுமலை புலிகள் காப்பகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 10:26 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஊட்டியில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்த்துவிட்டு, முதுலை புலிகள் காப்பகம் சென்று விட்டு திரும்புவது வழக்கம். ஏனென்றால், முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள வளர்ப்பு யானைகளைப் பார்க்கவும், வனத்திற்கு நடுவே சவாரி செய்யவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதியிலும் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டியது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இன்று முதல் வருகிற நாளை மறுநாள் (ஜூலை 22) வரை 3 நாட்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் சுற்றுலாத் தலங்கள் மூடப்படுகிறது. அதேபோல், வாகன சவாரியும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் கூறுகையில், “வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெப்பக்காட்டில் கடந்த ஒரு வாரம் பெய்த மழையால் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீலகிரிக்கு இன்னும் காத்திருக்கு.. கோவையிலும் வாய்ப்பு.. வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.