ETV Bharat / state

"டெல்லியில் உட்காந்து கொண்டு எந்த மொழி பேச வேண்டுமென முடிவு செய்ய முடியாது" - எம்பி செந்தில்குமார்

MP Senthilkumar speech in Parliamentary Budget Session: நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், டெல்லியில் உட்கார்ந்து கொண்டு தமிழகம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தில் என்ன படிக்க வேண்டும், எந்த மொழி பேச வேண்டும் என்று முடிவு செய்ய முடியாது என தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்தார்.

Senthilkumar mp
எம்.பி.செந்தில்குமார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 5:04 PM IST

தருமபுரி: நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், கலந்து கொண்டு பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், "கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. மாநிலத்தில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு 3 கிலோ மீட்டருக்கும் ஒரு நடுநிலைப்பள்ளி, ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒவ்வொரு 7 கிலோ மீட்டருக்கும் ஒரு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கக்கூடிய மாணவ, மாணவியர்களின் மொத்த சதவீதம் 52ஆக எட்டியுள்ளது. இந்த இலக்கு தேசிய சராசரியை விட மிகவும் அதிகம். தமிழ்நாட்டில் இப்போது எட்டியுள்ள இலக்கை இந்தியா 2030ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என இலக்கு வகுத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு இப்போதே எட்டி சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனைக்கு காரணம் திராவிட கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்கள் கொண்ட கொள்கைதான். 1920ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சென்னை மாநகராட்சி பள்ளிக்கான மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னாளில் காமராஜர் என்ற மாபெரும் தலைவரால் அது முழுமையாக கொண்டு வரப்பட்டது.

மாணவர்களை கல்விக்காக பள்ளிக்கு அழைத்து வந்த பல திட்டங்கள் திராவிட அரசியலில் உள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் முன்னேறிய திட்டங்களில் முதன்மையாக தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டமாகும். அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் மற்றொரு திட்டமும் உள்ளது.

இந்த உதவித் தொகை மாணவிகள் படிப்பு முடியும் வரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியே ஆகும். மொத்த சேர்க்கை விகிதத்தில் அதிகமாக பெண் கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில், கல்வி பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். டெல்லியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலத்தில் என்ன படிக்க வேண்டும், எந்த மொழி பேச வேண்டும் என்று முடிவு செய்ய முடியாது.

வளர்ந்த நாடுகளில்கூட கல்விக் கொள்கையை மாகாணம் அல்லது மாநில அரசு தீர்மானமாக எடுத்துக் கொள்கிறது, தவிர ஒன்றிய அரசு செய்வதில்லை. எனவே, கல்வி மாநில உரிமைகள் மற்றும் மொழி உரிமைகளின் முக்கியத்துவம் அளித்து கலாச்சார பன்முகத்தன்மை காக்கப்பட வேண்டிய நேரம் இது. தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். தொழில் முறை படிப்புகளில் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார்.

அதனால் கிராமப்புறம் உள்ளவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர முடிந்தது. ஆனால் இப்பொழுது இருக்கும் நீட் (NEET) தேர்வால் வசதி படைத்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடிகிறது. மாணவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள். நீட் தேர்வு மையங்களுக்குள் நுழையும் முன் பரிசோதனை செய்து, அவர்களை பயங்கரவாதிகள் போல கருதி, மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்கள் 18 பேர்.. டெல்லியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.