ETV Bharat / state

“ராம ராஜ்ஜியம் உரிமையற்றது.. நாடு முழுவதும் ஈ.வெ.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்குவோம்” - கனிமொழி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 12:41 PM IST

MP Kanimozhi: பாஜக உருவாக்க நினைத்த ராம ராஜ்ஜியம் யாருக்கும் உரிமையற்ற ராம ராஜ்ஜியம் என்றும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஈ.வெ.ராமசாமி ராஜ்ஜியத்தை நாடு முழுவதும் உருவாக்கிக் காட்டுவோம் எனவும் தூத்துக்குடியில் எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

MP Kanimozhi has said that lets create E V Ramasamy Rajya across the country
நாடு முழுவதும் ஈ.வெ.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்கிக் காட்டுவோம் என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் 'INDIA வெல்வது நிச்சயம்' என்ற தலைப்பில் நேற்று (பிப்.5) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் எம்.பி கனிமொழி, மாநில சிறுபான்மையின ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷானாவாஸ் எம்.எல்.ஏ, திமுக எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமைந்தராஜ் உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளை பார்வையிட தமிழகம் வந்தார். ஆனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்க மாட்டோம் எனக் கூறி மறுத்துவிட்டார். நாங்கள் கொடுத்த வரியை வைத்துக் கொண்டு பேசுகிற பேச்சா இது?

ஒரு தமிழச்சி பேசுகின்ற பேச்சா இது? மழை வெள்ள பாதிப்புகளை முழுவதுமாக பார்த்துவிட்டு, கோயிலுக்குள் நுழைந்து அவர் கோயிலில் சுத்தம் இல்லை எனச் சொன்னார். கோயிலைப் பற்றி எங்களிடம் சொல்கிறீர்களா? நாங்கள் தர்கா, சர்ச் மற்றும் முத்தாரம்மன் கோயிலுக்கும் செல்வோம். அண்ணா சொன்னது போல, எங்களுக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

நான் சவால் விடுகிறேன், இங்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கட்சியினர் இணைந்து போட்டியிடுகிறோம் என்று சொன்னால், எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட்டைக் காப்பாற்றுங்கள் பார்ப்போம். 40 பாராளுமன்றத் தொகுதிகள்தான் உள்ளது. 50 தொகுதிகள் இருந்தாலும், அந்த 50 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத் தொகுதியாக நம் தூத்துக்குடி தொகுதி இருக்க வேண்டும்.

இந்துக்களை தனக்கான அரசியல் கேடயமாகவும், அரசியல் ஆதாயமாகவும் பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை பாஜகவினர் பாதுகாக்கவில்லை. பெரும்பான்மையான இந்துக்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்தது என்று எண்ணிப் பார்த்தால், எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை.

நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பாஜக கொண்டு வந்தது. பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து சட்டமும், நாட்டில் உள்ள சாதாரண மற்றும் சாமானிய மக்களுக்கு எதிரான சட்டமாகும். அதேபோல், அவை மாநில உரிமைகளைப் பறிக்கக்கூடிய சட்டம். கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் திருத்தச் சட்டம் ஒன்றை பாஜகவினர் கொண்டு வந்தனர்.

அது என்ன சட்டம் என்பதும், அதில் என்ன மாற்றம் உள்ளது என்பதும் யாருக்கும் புரியவில்லை. ஏனெனில், அது முழுவதும் இந்தியில் இருந்தது. மேலும், அதைப் படித்த பாதி வக்கீல்களுக்கும் அந்த சட்டம் பற்றி புரியவில்லை. நீதிபதிகளுக்கும்தான். பாதி நீதிபதிகள் புரியாமல்தான் இருக்கிறார்கள், என்ன செய்ய முடியும்? பாஜகவை எதிர்த்து நாட்டில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என யாரும் கேள்வி கேட்க முடியாது.

எதிர்த்து கேள்வி கேட்ட எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கணக்கிட்டு சொல்ல முடியாது. பாஜக ஆட்சி மறுபடியும் வந்தால், நாடாளுமன்றம் இருக்காது. மேலும், ஜனநாயகம் காணாமல் போய்விடும். எனக்குத் தெரிந்து நாடாளுமன்றத்தில் வரக்கூடிய பல பிரதமர்களும் அவர்களால் முடிந்தவரை அவையில் இருப்பார்கள். கேள்வி எழுப்பப்பட்டால், பிரதமர்கள் பதில் சொல்லக்கூடிய நாட்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் தற்போது இருக்கக்கூடிய பிரதமர் நரேந்திர மோடி, அத்தி பூத்தது போலத்தான் அவைக்கு வருவார். 5 நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டார். மேலும், அதற்கு மேல் இருக்க மாட்டார். அவர் உட்காராத காரணத்தினால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்துவதற்காக, இரண்டு பேர் நாடாளுமன்றத்தில் குதித்தார்கள்.

யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை எப்படி ஏற்பட்டது என்று கேட்டதற்கு, எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இது மாதிரி சம்பவம், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தினம்தோறும் நடக்கக் கூடும். கேள்வி நேரத்தில் கேள்வி கேட்டால் சஸ்பெண்ட் செய்து விடுகின்றனர்.

இந்த நாடு மற்றும் ஜனநாயகம், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இந்தியா (INDIA) கூட்டணி வெற்றி பெற வேண்டும். பாஜக உருவாக்க நினைத்த ராம ராஜ்ஜியம் யாருக்கும் உரிமையற்ற ராம ராஜ்ஜியம். அது மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் ராம ராஜ்ஜியமாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நமது கனவு என்பது, ஈ.வெ.ராமசாமி ராஜ்ஜியம். அதை நாடு முழுவதும் உருவாக்கிக் காட்டுவோம். இதுவே இந்தியாவின் வெற்றி" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் தொடங்கிய திமுக தேர்தல் அறிக்கை கருத்துக்கேட்பு கூட்டம்; வெளி துறைமுக திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.