ETV Bharat / state

நீலகிரியில் கடும் மேகமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி; ஏமாற்றதுடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள்! - SNOW IN NILGIRIS

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கடும் மேகமூட்டம் நிலவி வருகிறது. எனவே கவனமுடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும் என காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மேகமூட்டத்தில் பயணிக்கும் வாகனங்கள்
மேகமூட்டத்தில் பயணிக்கும் வாகனங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 4:56 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக, குன்னூர், உதகை, கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான மேகமூட்டம் நிலவி வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெண்மையான மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், மேக மூட்டத்தில் பனித் துளிகள் சாரலாக பெய்து வருகிறது.

குறிப்பாக, குன்னூரில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா போன்ற பகுதிகளில் மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியைக் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் உள்ளூர்வாசிகள் பகல் நேரங்களிலேயே தீ மூட்டி தங்களது உடலை சூடேற்றிக் கொள்கின்றனர்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2வது முறையாக மீண்டும் 100 அடியாக உயர்வு!

சாலைகளில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு ஊர்ந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் வாகன விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் மலைப்பாதையில் கவனமுடன் வாகனங்களை இயக்கி செல்ல வேண்டும் என காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.