ETV Bharat / state

மகன் இறந்த துக்கத்தில் மகளுடன் தாய் தற்கொலை.. நெல்லையில் நிகழ்ந்த சோகம் - Nellai Mother Suicide issue - NELLAI MOTHER SUICIDE ISSUE

Nellai Suicide Case: நெல்லையில் மகன் நெஞ்சுவலியால் இறந்த துக்கம் தாங்காமல், மகளுடன் சேர்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பு தொடர்பான கோப்புப்படம்
உயிரிழப்பு தொடர்பான கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 1:19 PM IST

திருநெல்வேலி: தாழையூத்து அடுத்த கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(50), கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவரது தாய் பகவதி(75) கிருஷ்ணன் வீட்டுக்கு அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். மேலும், கிருஷ்ணனின் தங்கை மாலாவும் கணவரைப் பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

அதனால், தனது குடும்பம் மட்டுமல்லாமல் தனது தாய் மற்றும் சகோதரியையும் சேர்த்து கவனித்து வந்துள்ளார் கிருஷ்ணன். இந்த நிலையில், நேற்று கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவரது உடல் வீட்டில் இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, மகன் இறந்த தகவலறிந்து வந்த தாய் பகவதி மற்றும் சகோதரி மாலா இருவரும் கதறி அழுதுள்ளனர்.

அப்போது தாய் பகவதி, "இனிமேல் தன்னையும், தனது மகளையும் கவனிக்க யார் இருக்கிறார்" என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லி அழுது புலம்பியுள்ளார். அதைத் தொடர்ந்து, தனது மகளை அழைத்துக் கொண்டு, கிருஷ்ணனின் வீட்டிலிருந்து அவர்கள் வசிக்கும் வீட்டிற்குச் சென்ற பகவதி நீண்ட நேரமாகியும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

தற்கொலை எண்ணத்தை கைவிடுக
தற்கொலை எண்ணத்தை கைவிடுக (Credits- ETV Bharat Tamil Nadu)

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பின்னர், அக்கம்பக்கத்தினர் இதுதொடர்பாக தாழையூத்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல், தாய் மகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தற்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பெரும்பாக்கம் நீர்முழ்கி பட்டா பகுதியில் கட்டுமானமா? - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.