ETV Bharat / state

நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! - Nursing students food poison issue - NURSING STUDENTS FOOD POISON ISSUE

Nursing students food poison issue: சேலத்தில் நர்சிங் கல்லூரி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட புகைப்படம்
மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட புகைப்படம் (CREDITS - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 3:58 PM IST

சேலம்: அயோத்தியாபட்டணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அங்கேயே உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் அவர்களுக்கு தட்டைப் பயிறு குழம்புடன் சாப்பாடு வழங்கப்பட்ட நிலையில் மாணவிகள் சாப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் அடுத்தடுத்து நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உடனடியாக உணவு அருந்திய அனைவரையும் கல்லூரி நிர்வாகம் அவர்களது சொந்த மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கி வந்துள்ளனர். தற்பொழுது அவர்களுடைய உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அனைவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். அடுத்தடுத்து மாணவிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனால் சேலம் அரசு மருத்துவமனை வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

இதையும் படிங்க: அடிக்கடி சேதமாகும் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலம்.. புதிய கான்கிரீட் தளம் அமைக்க கோரிக்கை! - Sinkhole In The Vallanadu Bridge

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.