ETV Bharat / state

ரஷ்ய தம்பதியிடம் கட்டு கட்டாக கரன்சி.. விமான நிலையத்தில் பரபரப்பு.. - Money smuggling case - MONEY SMUGGLING CASE

Money smuggling case: டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த ரஷ்ய தம்பதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

chennai airport photo
சென்னை விமான நிலையம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 1:06 PM IST

சென்னை: டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணியளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் பெருமளவு இந்திய பணம், சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், அதிகாலையில் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை, தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது ரஷ்ய நாட்டைச் சேர்ந்த, அர்டிமி பிடீகோவ் என்பவர், அவருடைய மனைவி அனஸ்டசீயா ஓரோபெவா, மற்றும் அவர்களின் கைக்குழந்தை ஆகியோர், டெல்லியில் இருந்து, இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தனர். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் ரஷ்ய நாட்டு தம்பதியை நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து, அவர்களுடைய சூட்கேஸ் மற்றும் பைகளை திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.

அதற்குள் கட்டுக் கட்டாக இந்திய பணம் பெருமளவு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் மொத்தமாக சுமார் ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருந்துள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த தம்பதிக்கு, இந்திய பணம் எவ்வாறு கிடைத்தது? இந்தப் பணத்தை டெல்லியில் இருந்து சென்னைக்கு எதற்காக கொண்டு வந்தனர்? என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பி விசாரணை செய்தனர். ஆனால் அவர்கள் சரியான பதில் கூறவில்லை. அதோடு இந்த பணத்திற்கான முறையான ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.

இதனால் சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் உள்ள, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையிலும் சரியானபடி பதில் கூறவில்லை. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், ரூ. 25 லட்சம் மதிப்புடைய, இந்திய பணத்தை பறிமுதல் செய்தனர். அதோடு ரஷ்ய தம்பதியையும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்திற்கு, கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு எப்போது வந்தனர்? எதற்காக வந்தனர்? பணத்தை ரஷ்ய தம்பதியிடம் டெல்லியில் கொடுத்தது யார்? சென்னையில் யாரிடம் இந்த பணத்தை கொடுப்பதற்காக எடுத்து வருந்தனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள, இந்த காலகட்டத்தில், இவ்வளவு அதிகமான பணத்தை, டெல்லியில் இருந்து ரஷ்ய தம்பதி சென்னைக்கு எடுத்து வந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'திறந்தவெளியில் கட்டுமானப் பணிகள் கூடாது' - வெயில் காரணமான அதிரடி உத்தரவு - Extreme Heat Wave In TN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.