வேலூர்: நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் கோமதி தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி பணம் நிரப்புவதற்காகக் கொண்டு வந்த ரூ.37 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்த பணத்தை வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் உரிய ஆணவங்களைச் சமர்ப்பித்த பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் வங்கி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! - Lok Sabha Election 2024